சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குக்கரில் சமைப்பது ஆரோக்கியமா?

முன்பு எல்லாம் உணவை சமைப்பது என்றால் மண் சட்டிகளில் விறகு அடுப்பை பயன்படுத்தி சமைத்து வந்தனர் .அதற்குப்பின் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் சமையல் எரிவாயு பயன்படுத்த ஆரம்பித்தனர் ஆனால் அரிசியை பாத்திரத்தில் நீர் ஊற்றி சமைத்து அரிசியானது சோறாக வந்த உடன் அதன் கஞ்சியை வடித்து   சாப்பிட்டு  வந்தனர்.

பின்னர் அதுவே காலப்போக்கில்  குக்கர் என்பது வந்த உடன் நாம் எவ்வளவு நேரத்தை துரித படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக உணவை சமைக்க வேண்டும் என்ற ஆசை பெருபாலானவர்களிடம் தோன்றியது .பின்னர் சாதம்  வேகவைக்க குக்கர் ,பருப்பு வேகவைக்க குக்கர் என வீடு ஒன்றுக்கு 2 குக்கர்களை பயன்படுத்தும் அளவுக்கு காலம் நவீன வளர்ச்சியை நோக்கி சென்றது .

ஆனால் இறுதில் என்ன ஆனது நிதானமாக சமைத்து நிதானமாக உண்டவர்கள் நூறு வயது வாழ்ந்தனர் . அவர்கள் தான் நம் மூதாதையர்கள் .அதற்கு பிறகு வந்த நம் பெற்றோர்கள் வேகமாக சமைக்க வேண்டும் என்பதற்காக குக்கர் பழக்கத்திற்கு சென்றனர் .அதனால் தான் என்னவோ நம்முடைய பெற்றோர்கள் காலத்தில் தான்  சர்க்கரை நோயாளிகளே அதிகமானார்கள் .

உண்மையில் குக்கெரில் சமைப்பதால் நமக்கு கிடைக்க வேண்டிய முழுசத்தும் கிடைப்பதில்லை என்பது தான் நம்மில் பலபேருக்கு தெரியாத உண்மை. குக்கரில் சமைப்பதால் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்க கூட தாமதமாகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.குக்கெரில் சமைக்கும் உணவில் அதிக ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரெட் அதிகமாக இருப்பதால் ஜீரண சக்தி தாமதமாகிறது .

நாம் பாத்திரத்தில் சமைக்கும் போது நாம் உண்ணும் உணவின் சத்து முழுமையாக கிடைக்கிறது .இவ்வாறு  முழுசத்துக்களும் கிடைப்பதால் ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது .

நாம் முடிந்த அளவு குக்கரை தவிர்த்து    பாத்திரத்தில் சமைத்து உண்பதன் மூலம் நாம் உண்ணும் உணவின்  ஜீரண சக்தி சீராக அமைகிறது .அதன் முழுசத்துக்களும் நமக்கு அப்படியே கிடைக்கிறது .

With the advent of the cooker came the desire of most people to cook food as fast as we can.