கொரோன உலக அளவில் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று உலக சுகாதார அமைப்பு பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அதிகமாக இளைஞர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்றும் , மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டது.
இதனை தொடர்ந்து உலகளவில் கொரோன பாதிப்பு கோடியை தண்டியுள்ள நிலையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருவருவது குறிப்பிடத்தக்கது .அதன் அடிப்படையில் கொரோன பாதிப்பு சில நாடுகளில் இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் மேலும் இளைஞர்களும் இந்த தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும் என்றும் ஆகையால் இளைஞர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
We call on young people to take precautionary measures: #handhygiene, physical distance, wear a mask, stay home if you’re feeling unwell, avoid crowded places & mass gatherings, to protect yourselves & others from #COVID19. Play it safe & help end this pandemic. pic.twitter.com/5U7eQi1BZj
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) July 30, 2020
மேலும் இளைஞர்களால் தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க காரணமாகியுள்ளனர் . ஆகையால் இளைஞர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் , மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இளைஞர்கள் கையாள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.
இளைஞர்கள்தான் உலகின் மாற்றத்தின் இயக்கமாக இருக்க வேண்டும். கொரோனா அபாயமான பரவலை குறைப்பதில் நம் அனைவருக்கும் ஒரு கடமை உள்ளது என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் நினைவில் கொண்டு செயல்படவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேடுகோள் விடுத்துள்ளார் .
Young people must be the movement for change in the world. Every individual must act with the memory that we all have a duty to reduce the dangerous spread of corona. announced world health organization Tedros Adhanom Ghebreyesus