சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தாய்ப்பால் ஆய்வாளர்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு உலகிலே மிக சுத்தமான,  சுகாதாரமான, சத்தான உணவு ஆகும் . அந்த தாய்ப்பாலை தரும் அம்மாக்களின் உடல்நிலை கருதியும்,  தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும்  விழிப்புணர்வை வெளிப்படுத்தி,  அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குபவர்கள் தான் லேக்டேஷன் கண்சல்டண்ட்,  லேக்டேஷன் கவுன்சிலர் என சொல்லப்படும் தாய்ப்பால் ஆய்வாளர்கள்,  தாய்ப்பால் ஆலோசர்கள்.  பலங்காலமாய் நம் முன்னோர்கள் மூலம்  நம் பாட்டி காலம் வரை வந்த வழிமுறைகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் மறைந்து கொண்டும் வந்தது.  இதனால் பல அம்மாக்களும் குழந்தைகளும் பல கஷ்டங்கள் அனுபவித்தனர். அதனை நடைமுறைக்கு மறுபடி கொண்டுவரும் பணியில் ஈடுபடுபவர்கள் தான் இந்த தாய்ப்பால் ஆய்வாளர்கள் மற்றும் ஆலோசனையாளர்கள். 

குழந்தைகள் நல மருத்துவர்களும் இப்போது இதனை தனியே படித்து வருகிறார்கள். 

தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கு மிக அவசியமான ஓர் விஷயம்.  பிறந்த நொடி முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தருவது மிக அவசியம்.  6 மாதத்திற்கு பிறகு மற்ற சாப்பாட்டுடன் தாய்ப்பாலை தொடர்ந்து 2 வயதிற்கும் மேல் கொடுப்பது தான் மிக சிறந்தது என்று உலக ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலையம் வெளியுட்டுள்ள அறிவிப்பு ஆகும். 

ஆனால் நடைமுறையில் பல பெண்களுக்கு பால் சுரப்பதில்லை,  சுரக்கும் பாலை சரியாக குழந்தை குடிக்கவில்லை,  பால் கட்டிகொள்வது , இப்படி பல காரணங்களால் நடைமுறைக்கு ஒத்துவராமல் இருந்து கொண்டுவந்துள்ளது. 

இதனை சாத்திய படுத்தும் வகையில் வழிநடத்தி செல்கிறார்கள் இந்த தாய்ப்பால் ஆய்வாளர்கள் மற்றும் ஆலோசகர்கள். 

கர்ப காலத்தில் இருந்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். 

பால் சுரக்காத பெண்களுக்கு சாப்பாடு வழியாக எளிய முறையில் எப்படி சுரக்க வைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். 

பால் பற்றாமல் குறைவாக வரும் அம்மாக்களுக்கு  பாலை கூடதல் செய்வதற்கும் ஆலோசித்து வருகின்றனர். 

பால் கட்டும் போது எப்படி அதை தானே சரி செய்து கொள்வது பற்றியும் கூறுகின்றனர்.

பல பெண்கள் தன் பிரசவம் பிறகு வேலைக்கு செல்ல நேரிடும் அதனை காரணம் வைத்து பால் நிறுத்தி புட்டி பால் கொடுக்கின்றனர்.  அதனை தடுத்து பாலை வெளியே எடுத்து எப்படி தன் தாய்ப்பாலை தொடர்வது பற்றியும் அதனை சாத்தியமாகும் விதத்தில் பலரும் இவர்களை பின்பற்றி தன் தாய்ப்பால் காலத்தை தொடர்கின்றார்கள். 

பல மூட நம்பிக்கை மற்றும் பல பெரியவர்கள் கூறி வரும் தவறான நம்பிக்கை பற்றிய விழிப்புணர்வை ஆதர பூர்வமாக தாய்மார்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் தாய்ப்பால் பயணத்தை தொடர வழிவகுத்து வருகின்றனர். 

பல பெண்கள் தனியே இருந்து தன் குழந்தையை பார்த்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றனர். அதில் எப்படி குழந்தையை தாய்ப்பால்  நிறைய நாட்கள் நீடித்து கொடுத்து வரலாம் என்றும் ஆலோசிக்கின்றனர். 

தாய்ப்பால் பயணத்தை சிரமமாக பலர் எண்ணி நிறுத்திகொள்பவர்களும்  உண்டு.  அவர்களுக்கும் எப்படி சுலபமாக சிரமங்களை கடந்து தாய்ப்பால் ஊட்டி வளர்க்கலாம் என்று கூறி வருகின்றனர்.

தாய்மார்களின் வீட்டில்  உள்ளவர் இதனை தடுக்கும் விதமாக இருந்தார்கள் என்றால்,  அவர்களையும் சந்தித்து  அவர்களுக்கும் விழிப்புணர்வை எடுத்துரைத்து தாய்மார்களுக்கு ஊக்கிவிம்மாறு கூறிவருகின்றனர்.

இவர்கள் தற்போது ஆங்காங்கே சிறு எண்ணிக்கையில் இருந்தாலும்  இணையத்தின் மூலம் பல அம்மாக்களுக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். 

தாய்ப்பாலின் தூய்மை
நாடெங்கும் பரவுட்டும்

Breast milk is the cleanest, healthiest and most nutritious food in the world for a baby. Lactation Consultants, Lactation Counselors and Breastfeeding Counselors are the ones who raise awareness about the health of breastfeeding mothers and the importance of breastfeeding and try to implement it.