சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது ?சாதாரண விஷயம் ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரிது

what-causes-mouth-ulcers-how-can-it-be-cured-how
  பிரேமா   | Last Modified : 04 Aug, 2020 11:07 pm ஆரோக்கியம் ஆரோக்கியம்

வாய்ப்புண் எதனால் ஏற்படுகின்றது இதை எவ்வாறு முழுமையாக குணமாக்க முடியும் சாதாரண விஷயம் ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரிது .முதலில் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் வைட்டமின் பி குறைபாடு தான் .அதனால் தான் வாய்ப்புண் ஏற்பட்டால் முதலில் நாம் தேடுவது வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையை .

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட்டால் முதலில் வாய்ப்புண் சரியாகும் பிறகு திரும்ப வைட்டமின் பி குறைபாடு ஏற்படும்போது வாய்ப்புண் தோன்றும் .அதனால் நாம் வைட்டமின் பி உள்ள உணவு பொருள்களை உண்பதன் மூலம் வாய்ப்புண் உண்டாவதை தவிர்க்க முடியும் .நாம் கீரைகளையும் ,காய்கறிகளையும் நன்றாக சாப்பிட வேண்டும் .முக்கியமாக கீரைகளில் மணத்தக்காளி கீரையை துவையல் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம் வாரம் இரண்டு முறை .இல்லையெனில் மணத்தக்காளி சாறு அந்த புண் மீது படுமாறு செய்யலாம் .

வாய்ப்புண் வருவதற்கு வைட்டமின் பி குறைபாடு மட்டும் அல்லாமல் உடலில் ஏற்படும் சூடு காரணமாகவும் தோன்றலாம் .அதனால் நாம் தினமும் மோர் அருந்துவதன் மூலமும் உடற்சூடு ஏற்படுவதை தவிர்க்கலாம் .மோர்,இளநீர் ,பழங்கள் உடற்சூட்டை தணிப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு சிக்கலை போக்குகிறது உதாரணமாக மலசிக்கல் ,அஜீரணம் போன்றவற்றையும் போக்கக்கூடியது .

குடல் மற்றும் வயிற்று பகுதிகளில் புண்கள் இருந்தால் அது வாய்ப்பகுதிகளிலும் தோன்றுவதற்கு வாய்ப்பு மிக அதிகம் .நம் உடலில் உள்ள நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நுண்ணயிரிகளின்  அளவு குறையும் போதும் நமக்கு வாய்ப்புண் தோன்றும் .நம் உடலில் ஜீரண சக்தியை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரியான லாக்டோபாசிலஸ் அளவு குறையும் போது வாய்ப்புண் தோன்றும் .பால் ,தயிர் ,மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்வதன்  மூலம் லாக்கடோபாசில்ஸ் என்ற நுண்ணுயிரியின்  அளவை அதிகரிக்கலாம்   

தேன் மற்றும் வெண்ணையை வாய்ப்புண் மீது வைக்கும் போது வாய்ப்புண் குணமாக வாய்ப்புகள் அதிகம் .துளசி மற்றும் மணத்தக்காளி  இலையை மென்று முழுங்கும் போதும் வாய்ப்புண் குணமாகும் . கல்லுப்பை பயன்படுத்தி மிதமான கொதிநீரில் காலையும்,இரவும் வாய்கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண் உண்டாவதை சரி செய்ய முடியும் .    
 

சிலருக்கு நன்றாக சாப்பிட்டும், அவர்கள் மனஅழுத்ததுடன் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்புண் தோன்ற வாய்ப்புண்டு .தூக்கமின்மையால் கூட மனஅழுத்தம் உண்டாகலாம் .அதனால் ஒரு மனிதன் தூக்கம் தடைபடாமல் 7 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும் .நாம் வாய்ப்புண்ணை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணமாக்க வேண்டும் இல்லையென்றால் புற்றுநோய்யாக மாற வாய்ப்புண்டு .

The first reason for mouth ulcers is vitamin B deficiency.