சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கசப்பற்ற பாகற்க்காய் தோசை கேள்விபட்டுள்ளீரா??

bitter-gourd-greatness
  மீனா   | Last Modified : 13 Aug, 2020 09:47 pm ஆரோக்கியம் ஆரோக்கியம்

 

பாகற்காய் என்றாலே எல்லோர்க்கும் முகம் சுளிக்க வைக்கும் சுவை தான் நினைவில் வரும். 

ஆனால் சுவையை பார்த்து அந்த பாகற்காய்யில் உள்ள பல வகையான நன்மைகளை நாம் மறந்துவிடுகிறோம். 

ஆம் இதில் வைட்டமின் ஏ,பி1, பி2, பி3, சி,  மக்னீசியம்,  ஃபோலட் (folate), நார்சத்து,  பாஸ்பரஸ்,  சிங்க், பாலிபெப்டைட் பி (polypeptide p) போன்ற பல விஷயங்கள் நிறைந்து உள்ளது.  இது சர்ம பிரச்சனை , குடற்புண் பிரச்சனை , முடி வளர்ப்பு,  இதய நோய்,  கல்லீரல் பிரச்சினை,  உடல் எடை குறைக்க என அனைத்துக்கும் நன்மை தரும் ஓர் அமிர்தம் ஆகும். 

ஏதும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு,  மருத்துவர் பரிந்துரைத்து வேறு வழியின்று கசாயம்,  மருந்து போல் அந்த நேரத்தில் சேர்த்து கொண்டு, உடல் நலம் பெற்ற பின்னர் பாகற்காய்யை அப்படியே ஒதுக்கிவிடுவது தான் 80% வீடுகளில் நடந்து வருகிறது. 

"சுவையாய் இருந்தால் சாப்பிட மாட்டோமா? " என்ற கேள்வியை எழுப்பிவிட்டு எப்போது போல் பாகற்காய்யை ஒதுக்கிவிடுகிறார்கள். 

அந்த கேள்விக்கு  பதிலாய் வீட்டில் சமைப்பவர் கசப்பு தெரியாமல் பல விதத்தில் ,பல வகையாய் ,முயற்சித்தும் பல பிள்ளைகளும் பெரியவர்களும் ஒதுக்கி வைத்துக்கொண்டே வருகிறார்கள். 

இந்த நிலை மாறவே ஓர் அரிய வகையில் ஓர் அர்புதமாய் வருகிறது இந்த கசப்பற்ற பாகற்காய் தோசை. 

தோசை பிடிக்காத பிள்ளைகளே இருக்க முடியாது.  பாகற்காய்யை நன்கு எண்ணெய்யில் வதக்கி,  அதனை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் மொறு மொறு தோசையை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

கசப்பற்ற பாகற்க்காய் தோசை வீடெங்கும் வலம் வரட்டும்.

Bitter gourd greatness