10 வேப்பிலை கொழுந்து இலைகள் ,10 துளசி இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றை நன்கு அரைத்து அதன் சாறு எடுத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும் .
சர்க்கரைநோயின் எதிரியாக கருதப்படுவது பாகற்காய் .இது சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும் .அத்துடன் இரத்தத்தை சுத்திகரித்து மிகவும் சுத்தமான இரத்தத்தை உடலுக்கு செலுத்தும் .பாகற்காய் சாற்றை தினமும் 30 மி.லி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
நாவல் பழம் பொதுவாக மருத்துவ குணம் கொண்டவை .இதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் .இதன் விதைகளை அரைத்து பொடி செய்து தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
கடுக்காய்,தான்றிக்காய் ,நெல்லிக்காய் இதன் மூன்றின் கலவையே திரிபுலா.இது மிகவும் முதனமையான மருந்தாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது .இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உடலை சீராக வைக்க உதவுகிறது .தினமும் இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும் .
ஆலமரத்தின் பழமை மட்டுமே நம்மில் பலருக்கு தெரிந்திருந்த வாய்ப்புண்டு ஆனால் அதன் பட்டையில் இருக்கும் மகத்துவம் பற்றி தெரியாமலே போய்விட்டது .ஆலமரப்பட்டையை 20 கிராம் எடுத்துக்கொண்டு ,4 கிளாஸ் அளவு தண்ணீரில் கொதிக்க விடவும் .பின்னர் 1 கிளாஸ் அளவுக்கு வந்தவுடன் அதனை ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும் .
இலவங்கம் வீட்டிலும் ஆயுர்வேதத்திலும் மிகவும் பயன்படுத்தப்படும் பொருள் .ஒரு ஸ்பூன் இலவங்க பொடியை வெது வெதுப்பான நீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும் .
பெரிய நெல்லிக்கனி நமக்கு எளிதில் கிடைக்க கூடிய ஒரு கனி .இதை தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இது இரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவுகிறது .
சர்க்கரை நோயுள்ளவர்கள் சிறிது வெந்தயத்தை எடுத்து இரவில் மிதமான நீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் அரைத்து குடித்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் .
ஆவாரம் பூ பொடியை தினமும் நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்கும் வரும் .
Diabetes usually develops easily after the age of thirty. It is hereditary and also becomes diabetic when the amount of sugar in the diet increases.