சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இரவில் திடீரென்று யாரோ என்னை அமுக்குவதாய் உணர்கிறேன். அப்பொழுது எழ முடியவில்லை, கத்த முடியவில்லை திக் திக் இரவு

இரவில் நல்ல உறக்கத்தில்  திடீரென்று யாரோ தன்னை எழுத்துருக்க  விடாமல்  அமுக்குவதும் அப்பொழுது அப்பொழுது நாம் எப்படியாவது சிரமப்பட்டு எழுந்திருக்க நினைபோம் ஆனா எழுந்திருக்க முடியாமல், உரக்க சத்தமிட்டு கதோவோம் அனால் கத்த முடியாது இதுமாதிரி பல நிமிடங்கள் போராடுவோம் பின்பு ஒருகட்டத்தில் அடித்துபுடித்து கண்களை திறக்க முடியாமல் திமிறி கொண்டு எழுந்து பார்த்தால் ஒன்றும் இருக்காது.

அடித்து புடித்து அடுத்தநாள் காலையில் நடந்ததை தன் நண்பர்களிடமோ அல்லது தோழிகளிடமோ இதனை தெரிவிப்போம் , அபொழுது தான் அவர்களும் இதை உணர்ந்திருப்பாதக சொல்வார்கள்  இவ்வாறு நடந்ததை பற்றி பேசியே அன்று நாள்முழுக்க ஓடிவிடும் 

அமுக்குவான் பேய்யா ?

இந்த பேயை பற்றி  கேள்விப்படாத ஆட்கள் இருக்க வாய்ப்பே இல்லை. நாம  சினிமாவில் பார்த்திருபோம். ஆனா இது போன்ற  பேயெல்லாம் கிடையாது. 

சினிமால காட்டுற பேயெல்லாம் நல்லதா இருக்கும். முன்னாடியே அதை யாராவது கொன்னுறுப்பாங்க. அதனால பழிவாங்க வரும். அது எப்படி பழிவாங்குது அதை பறித்தான் கதையா இருக்கும்.  சினிமாவ பத்தி சொன்னதான் தெரியனுமா என்ன ஒவ்வொரு படத்துலயும் பேய்களோட எண்ணிக்கை அதிகமாய்ட்டே(முனி,காஞ்சனா) இருக்கும் அது போன்று கற்பனை செய்யவைக்கும்.

அமுக்குவான் பேயோட வரலாறு

ஆனா இந்த அமுக்குவான் பேயோட வரலாறு பற்றி யாருக்கும் தெரிஞ்சிருக்க  வாய்ப்பு குறைவு..

எல்லோருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ‌ இரவு நேரத்தில் நம்மீது யாரோ ஒருவர் உட்கார்ந்து, அழுத்துவது போல் அல்லது கழுத்தை நெறிப்பது போல் ஒரு உணர்வு தோன்றும். ஆனால் கண்ணைத் திறக்கவோ, கத்தவோ முடியாது. ஏன் உடலைக் கூட நகர்த்த இயலாது.

இந்நிகழ்வு நடைபெற்ற சிறிது நேரம் கழித்து கண் விழித்துப் பார்த்தால், நமது அறையில் எவரும் இருக்க மாட்டார்கள். காலையில் எழுந்து இதை எவரிடமாவது விவரித்துக் கூறினால் அதனை அமுக்குவான் பேய் என்று கூறுவார்கள்.

மருத்துவர் 

இரவு தூக்கத்தில்  அமுக்குவான் பேய் வருகிறது , தூக்கவே முடியலை  என்று மருத்துவரிடம் கூறினால் அவர் தங்களை  மனநல மருத்துவமனைக்கு அனுப்பாமல் இருந்தாலே ஆச்சரியம்.

இது நம் தூக்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுதான் அமுக்குவான் பேய்

நாம் உறங்க ஆரம்பித்த பிறகு இரண்டு விதமான உறக்க நிலைகளை அடைவோம். ஒன்று துரித கண் அசைவு (Rapid Eye Movement - REM) நிலை. மற்றொன்று அப்படி இல்லாத நிலை. உறங்க ஆரம்பிக்கும் போது இந்த இரண்டாவது நிலையுள் நாம் மூச்சு விடுவது மூன்று படிகளின் குறைந்து ஒரு சீரான நிலையை அடையும். அதன் பின் REM நிலையில் ஆழ்ந்து உறங்குவோம். இந்நிலையில் தான் நாம் கனவுகள் காண்போம்.

ஆழ்ந்த உறக்க நிலை சமயத்தில் நம் உடல் பாகங்கள் அசையாத நிலையை அடைய மூளை க்ளைசின் (Glycine) என்ற ரசாயனத்தை (neurotransmitter) அனுப்பி நாம் கைகால்களை அசைத்து உறக்கத்தில் கனவுகள் சமயத்தில் மற்றவர்கள் மீது பிரயோகிக்கா வண்ணம் செயல் இல்லாமல் செய்யும். அச்சமயம் மூச்சு விடுவது போன்ற சில குறைவான சதைகள் இயங்கும்.

இந்த REM நிலையில் திடீரென ஒருவர் உறக்கம் தடைபடலாம். அப்போது கைகால் போன்றவை உடனே இயங்காது. அதனால் செயலற்று இருப்பது ஒரு காரணம். இரண்டாவது சீராக இயங்கும் நுறையீரல் உதரவிதானம் போன்றவை துரித நிலையில் இயங்காமல் மூச்சு அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இதற்கு ஆங்கிலத்தில் Sleep Paralysis (தூக்க பக்கவாதம்) என்பர்.இதைத்தான் நாம் அமுக்குவான் பேய் என்கிறோம் .

suffocation during sleep horrifying scenes at night whats the reason for sleep paralysis