கொரோனா தொற்றுநோயால் உலகமே முடங்கி கிடக்கிறது . ஒரு ஒருநாளும் பாதிப்பின் தாக்கம் உயர்த்து கொண்டே செல்கிறது இதற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உலக நாடுகள். இதனை தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் 17,106,007 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 668,910 பேர் உயிரிழந்துள்ளதக தெரிவித்துள்ளது . இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய்யுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன .
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் ஒரு வகையான பேரழிவு என்றும் இதன் தாக்கம் இன்னும் பல வருடங்கள் நீடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும்,. கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்றும்,ஆரம்பகட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகள் கூட தற்போது கொரோனா தொற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை சந்தித்து வருகிறது என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொருளாதார பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதனால் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் சமீப வாரங்களாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்திய சில நாடுகள் இரண்டாவது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The World Health Organization reports that corona epidemic is a catastrophe and its impact will last for many more years