சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உங்களிடம் இவை மூன்றும் உண்டா? கொரோனா உங்களைவிட்டு விலகி இருக்கும்.

உங்களிடம் இவை மூன்றும்  இருந்தால் கொரோனா உங்களை நெருங்கவே  முடியாது.அது என்னென்ன என்று தானே யோசிக்கிறீங்க .தூதுவளை,கற்பூரவல்லி மற்றும் துளசி  அடிக்கடி எடுத்துக்கொண்டால்  உங்களுக்கு சளித்தொல்லை வரவே வராது .

தூதுவளை:

Thudhuvalai

தூதுவளை மூலிகை  சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று . இந்த மூலிகை சளி, இருமல் ,காய்ச்சல் மேலும் சுவாசக்கோளாறு அதன் மூலம் வரக்கூடிய நோய்களை எதிர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்த  மூலிகை. இதனை துவையலாகவும் எடுத்துக்கொள்ளலாம் .துவையலாக எடுத்துக்கொள்ள தூதுவளை ,சீரகம் ,தனியா ,மிளகு ,மிளகாய்,புளி ,மற்றும் பருப்பு சிறிதளவு சேர்த்து எண்ணெய்யில் வதக்கி துவையலாகவும் எடுத்துக்கொள்ளலாம் .இல்லையெனில் தூதுவலையுடன் சின்ன வெங்காயம் ,பூண்டு,சுக்கு ,சீரகம்,திப்பிலி,கருவேப்பிலை,மிளகு  இவை அனைத்தையும் கஷாயமாக வைத்து குடித்து வரலாம் .

சின்ன வெங்காயம்  (சின்ன வெங்காயம் ஒரு கிருமி நாசினி . இது  உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது.நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடல் சோர்வைப் போக்கக் கூடிய தன்மை இதில் இருக்கிறதால் தான் பெரும்பாலும் அந்த காலத்திலெல்லாம் இந்த பெரிய வெங்காயம் வருவதற்கு முன்னால் எல்லாருமே பயன்படுத்தியது  சின்ன வெங்காயம்),பூண்டு (பூண்டு நம்மளுடைய உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் இரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்புகள் எல்லாம் நீக்கும் தன்மை உடையது ),சீரகம் (இந்த சீரகம் அகத்தைச் சுத்தப் படுத்தக் கூடிய மிகப்பெரிய ஒரு அரிய வகை ), சுக்கு (தோல் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட சுக்கு சிறிதளவு) ,திப்பிலி (திப்பிலியை  சேர்ப்பதால் உடலில் இருக்கக் கூடிய கழிவுகளை எல்லாம் நம்முடைய  தோல் வெளியே வெளியேற்றுவதற்கு இந்த திப்பிலி பயன்படுகிறது . அதிக அளவு சேர்க்கக்கூடாது ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளலாம்)அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு விஷயம் கருவேப்பிலை (இதில்  உடலுக்கு இரும்புச் சத்து கொடுக்கிறது)  மற்றும் மிளகு .சாதாரணமாக உணவில் சேர்க்கக் கூடிய இந்த பொருட்களெல்லாம் சேர்க்கும்போது  இது ஒரு உணவு மாதிரியே ஆகி விடுவதால் இதை  கசாயம் என்று  பயப்பட வேண்டியதில்லை.வாரம் இரண்டு முறை எடுத்து வந்தால் சளி ,சுவாசகோளாறு மற்றும் ஆஸ்துமா அனைத்தும் சரி ஆகிவிடும்.

கற்பூரவள்ளி (அ) ஓமவள்ளி:


இந்த ஓமவள்ளி மூலிகை மற்ற இலைகள்  எல்லாம் விட அதிக வீரியம் இல்லாத குறைந்த அளவே வீரியம் கொண்ட  மூலிகை. காரணம் இது குழந்தைகளுக்கு மிகவும் உகந்த ஒரு மூலிகை .எப்படின்னு கேட்டீங்கன்னா கைக்குழந்தைகளுக்கு அதாவது தாய்ப்பால் குடிக்கக் கூடிய குழந்தைகளுக்கு அந்த தாய்ப்பால்  குளிர்ச்சி காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் மலச்சிக்கல் , குழந்தைகளுக்கு சளியாக  மாறும்.குளிர்ச்சி காரணமாக  பொதுவாக  மலம் போவது குழந்தைகளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் .அப்போ அந்த மாதிரி காலகட்டத்தில் இந்த மூலிகை அதிக வீரியம் இல்லாததாலும் , அந்த சளியை போக்க கூடிய தன்மை இந்த மூலிகைக்கு இருப்பதாகவும் இந்த ஓமவள்ளி லேசாக  அரைத்து  குழைத்து , தாய்ப்பால் கொடுக்கக் கூடிய குழந்தைகளுக்கு கூட எந்தவித பயமும் இல்லாமல் தாராளமாக கொடுக்கலாம் .கற்பூர வள்ளியை துவையலாகவும் செய்து சாப்பிடலாம் .

இதை சாறாக அரைத்து  பனங்கற்கண்டு ,ஏலக்காய் பொடி, சுக்கு பொடி ஒரு சிட்டிகை அளவு ,  தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம் . சாதாரணமா நல்ல சுத்தமா கழுவிட்டு அப்படியே கூட சாப்பிடலாம். 

துளசி:

Thulasi

 தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை மென்று சாற்றை விழுங்கினால் குடல் ,வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது.  இது  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.  பல் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் இருந்தால் சிறிதளவு கிராம்பு தூள், பச்சைகற்பூரம், உப்பு கலந்து துளசியை பல்லில் வைத்ததால் பல் சொத்தை நீங்கிவிடும் மற்றும் ஈறுகளில் வீக்கம் குறைந்துவிடும் .தேள் கடித்து விட்டால் உடனடியாக துளசியை மென்று சாப்பிடுவதோடு கடிபட்ட இடத்தில் துளசி தடவினால் விரைவாக நிவாரணம் கிடைக்கும் .அடுத்து சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு எட்டு மணிநேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரை குடிக்கவேண்டும் இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தால் எந்த நோயும் அண்டாது அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும் ,பார்வை குறைபாடு நீங்கும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் திரிகடுகம் சூரணம் மற்றும் ஒரு கைப்பிடி துளசியை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி இருமலைக் கட்டுப் படுத்துவதோடு உடல் சோர்வு நீங்கும் .

மேலும் இது சுவாச கோளாறு ஆஸ்துமாவிற்கு நல்ல நிவாரணியாக உள்ளது .அடுத்து முக்கியமாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும் ,இந்த துளசி மஞ்சள் நீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலிலுள்ள வளர்ச்சி மற்றும் வீக்கத்தை குறைத்து , சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிக்க முடியும் .அதே போன்று சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரகங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் .கொலஸ்ட்ரால் குறையும். செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் .நரம்புகள் அமைதியாகி மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து மன அழுத்தத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்ணை சரிசெய்து பிரச்சினைகளில்  இருந்து விடுவிக்கும் .இந்த துளசி மஞ்சள் தண்ணீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று நோய் இல்லாத இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் என்பது நிச்சயம் .

If you have all three of these, Corona will not be able to get close to you. Just think about what it is.