நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரித்து கொண்டாலே கொரோனவை விரட்ட முடியும் என்கின்றனர் உணவியல் நிபுணர் . அசைவ உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று விளக்குகின்றனர்.
1 .அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்றால் நன்றாக கழுவி ,உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்த பின்னர் ,சமைத்து அப்பொழுதே சாப்பிட வேண்டும் .குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டு ,சூடு செய்து சாப்பிட கூடாது .
2 .பெரிய நெல்லிக்காய்,கொய்யா ,கருப்பு திராட்சைப்பழம் ,குடமிளகாய் ,தக்காளி ,பாதாம்,பிஸ்தா ,முந்திரி,கீரை வகைகள் ,மீன் வகைகள், மாம்பழம்,மாதுளை,பப்பாளி ஆகியவை ஆரோகியாத்திற்கு தேவையான உணவு பொருள்கள் என பட்டியல் இட்டனர் உணவியல் நிபுணர்கள் .ஆரஞ்சு ,எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும் எடுத்துகொள்ள வேண்டும் .
3 .இட்லி ,தோசைக்கு பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்கிற சட்னி வகைகளை விட ,தேவையான பொருள்களை வதக்கி அரைத்து தாளித்து சாப்பிடும் சட்னி வகைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் ..
4 .சமைக்காத உணவுகளை முடிந்த அளவு தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். குளிர்பானம்,தயிர் ,மோர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது என வலியுறுத்துகின்றனர் .
5 .சர்க்கரை வள்ளி கிழங்கு ,பனங்கிழங்கு உள்ளிட்ட பலவகை கிழங்குகளும் எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்ப்பு நோய் சக்தியை கூட்டலாம்.
6 .தினை ,கேழ்வரகு ,கம்பு ,சோளம் உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானிய உணவுவைகளை எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு,கால்சியம் மற்றும் நார்சத்து கிடைக்கிறது .
7 . தினமும் சாப்பிடும் உணவு வகைகளில் இஞ்சி,பூண்டு சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதுடன் சளி ,இருமல் ,பிரச்சனை வராது .
8 இவை அனைத்திற்கும் மேலாக உடற்பயிற்ச்சி மிக முக்கியம் .இவற்றை கடை பிடித்தால் கொரோன தொற்றுலிருந்து விடுபடலாம் .
if we eat these kind of foods we can build and boost our immunity system .