கபாசுர குடிநீர் எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம் ?
கொரோனா தொற்றுநோய்க்கு , இந்த கபசுரக் குடிநீர் குடிக்கும் பொழுது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது . இந்த கபசுரக் குடிநீர் , நம் அன்றாட உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம் .
சர்க்கரை நோயாளிகள் நிறைய பேர் மருந்துகள் தினமும் எடுத்து கொண்டு இருப்பார்கள் .அவர்கள் அவர்களோட சொந்த மருந்துகளோடு சேர்த்து இந்த மூலிகை சார்ந்த கபசுரகுடிநீரை தாராளமாக எடுத்துக்கலாம் .அதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது.
இந்த கபசுரக் குடிநீர் எடுக்கும் பொழுது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் .அதுபோல கிருமிகள் என்ன வகையான கிருமிகள் இருந்தாலும் அந்த உடலை விட்டு கண்டிப்பாக வெளியேரூம் . இந்த கபசுரக் குடிநீரில் 15 மூலிகைகள் கலந்திருக்கும் .இதை எடுத்துக்கொள்வதால் நுரையீரலுக்கு வர கூடிய கிருமி முழுமையாக வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும் .
எல்லா வயதினரும் கபாசுர குடிநீர் எடுக்கலாம் .
எப்படி எடுக்க வேண்டும் என்றால்,
300ml தண்ணிரீல் , 20 கிராம் கபசுர குடிநீர் தண்ணிரீல் கலந்து கொதிக்க வைக்கவேண்டும் . நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து, 4 பங்கு தண்ணீர்விட்டு ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி அந்த கபசுரக் குடிநீர் எடுக்கும் பொழுது கண்டிப்பா இந்த சளி தொந்தரவுகள் எல்லாமே வெளியேறும்.அதாவது, கபசுரக் குடிநீர் என்றால் கபம் சார்ந்த விஷயங்கள் அனைத்துமே குணப்படுத்தும் என்று பொருள்.சளி தொந்தரவுகள் ,கொரோனவைரஸ் மட்டும் கிடையாது நமது உடம்பில் எந்த வகையான கிருமியாலும் ஏற்படக்கூடிய சளி பிரச்னைகளுக்கு இந்த கபசுரக் குடிநீர் எடுக்கும் பொழுது கண்டிப்பாக முற்றிலும் குணமாகும் .இது ஒரு ஏழு நாட்கள் வரை தொடர்ந்து எடுத்துகலாம். காய்ச்சி குடிக்கும் பொழுது ,வெதுவெதுப்பாக சூடாக்கி குடிக்கும் போது கிருமிகளும் வெளியேற ஆரம்பிக்கும் .காய்ச்சிய கபசுர குடிநீரை மூன்று மணி நேரத்திற்குள்ளாக எடுத்துக்கொள்ளும்பொழுது மருத்துவ தன்மை முழுமையாக கிடைக்கும் .
how to take kabasura kudineer regularly?