சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நிம்மதியாக தண்ணீரை கூட குடிக்கமுடியாத நிலைமையில் அமெரிக்கா நகரங்கள்

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு தற்போது தலைவலியை கொடுத்துக்கொண்டிருப்பது கொரோனா மட்டும் இல்லை , அங்கே புதியதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஒரு சில அமீபாக்கள் தான்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே  கொரோனா, சூறாவளி , புயல் மற்றும் காட்டு தீ என பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் அமெரிக்கா , தற்போது இந்த அமீபாவால் நிலைகுலைந்துள்ளது .

கண்ணுக்கே தெரியாத இந்த வகை அமீபா, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் குடும்பத்தை சேர்ந்தது .இந்த அமீபாக்கள் பொதுவாக நீர்நிலைகளில் காணப்படுவதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்தும் போது அவர்களின் உடலுக்குள் சென்று நேராக மனிதமூளைக்கு உள்ளே சென்று , சிறிது சிறிதாக அவர்களின் மூளை செல்களை உண்றுவிடுகிறது . சமீபத்தில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுவன் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது .

அம்மாகாணத்தின் சுகாதார அமைப்பு , தண்ணீரை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தியும் க்ளோரின் கொண்டும் அந்த அமீபாவை அழித்துவிட்டு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதாக கூறி இருக்கிறது . எனினும் இதற்கு இரண்டு மாத காலஅவகாசம் தேவை என்று குறிப்பிட்டுள்ளது .

அதுவரை மக்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை அருந்த பல அமைப்புகள் வலியுறுத்துக்கின்றன.

American cities in to water quality issues.