சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சீனாவின் இராஜ தந்திரத்தை கனடா பிரதமர் அம்பலப்படுத்தியுள்ளார்

கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் 2018 ம் ஆண்டு முதல் தொடர்கிறது.  ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை அமெரிக்க உத்தரவாதத்தின் கீழ்,கனடா கைது செய்ததில் இருந்து விளைவு கடுமையானது. 

மெங் கைது செய்யப்பட்ட காரணத்தினால் , கனடா குடிமக்களும் ,  முன்னாள் தூதரும்  ஆன மைக்கேல் கோவ்ரி மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோரை உளவு பார்த்த   குற்றச்சாட்டில் சீனா கைது செய்தது.

இந்த இரண்டு கனடா குடிமக்களை சீனா அரசு கைது செய்து 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது . சீனா பழிவாங்குதலால் கனடா அரசுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியுள்ளது .உலக ஒழுங்கை மாற்றியமைக்க சீனா விளையாடி வருகின்றது என்றும் கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்   .

வெளிநாட்டவர்களை  சிறையில் அடைத்தல், வர்த்தகம் இடையேயான உறவுகளைத் திணறடித்தல் மற்றும் குறைவான சீன மாணவர்களை அனுப்புதல் போன்ற நிலைகளில் சீனா அரசு பல்வேறு யுக்தியை கையாளுவதாக குற்றம் சாட்டியுள்ளார்   .

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவ சீனா காரணமாக இருந்ததால் அது குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு ,ஆஸ்திரேலியா அரசு வலியுறுத்தியதால் ,இப்பொழுது ஆஸ்திரேலியா மீதும் கடும்கோபத்துடன் இருந்து வருகிறது .

கனடா நாட்டு குடிமக்களை சீனா அரசு  விடுவிக்க வேண்டுமானால் ,கனடா  ,ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார் .இவ்வாறு சீனா அரசின் இராஜ தந்திரத்தை கனடா பிரதமர் அம்பலப்படுத்தியுள்ளார் .


இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான கடுமையான  குற்றசாட்டுகளால் கனடா தன்னுடைய இராணுவ முக்கியத்துவம் சார்ந்த  பொருட்களை ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி  செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார் .

Relations between Canada and China have continued since 2018. The consequences have been severe since Canada's arrest of Hawaii's chief financial officer, Meng Wenzhou, under US warrant.