சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சீனாவில் பரவும் புதிய வைரஸ் -7 பேர் பலி

சீனாவின் வூகான் நகரில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.இந்த துயரிலிருந்தே மீளாமல் இருக்கும் போது சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் உருவாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் ஆனது பூச்சிகளால் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 37 கும் மேற்பட்டோரும் மேலும் அன்ஹு மாநிலத்தில் 23 க்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த வைரஸின் பெயர் எஸ்எப்டிஎஸ் என கூறப்படுகிறது.

இந்த வைரஸானது நச்சு ஈ ,வண்டுகள் மனிதர்களை கடிப்பதன் மூலம் உண்டாகும் வைரஸ் நோய் ஆகும். ஹிஜியாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெங் ஜீ பாங் கூறுகையில் எஸ்எப்டிஎஸ் வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்றும் இது நோயாளியின் ரத்தம் மற்றும் சளி மூலம் பரவும் என்றும் பூச்சிக்கடியில் இருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் என்றும் மத்தபடி பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த வைரசால் பாதிக்கபடுபவர்களுக்கு,காய்ச்சல் ,ரத்த சிவப்பணுக்கள் குறைவது ,ரத்த வெள்ளை அணுக்கள் குறைவது ,உடல் தசை வலி,நரம்பு பிரச்னை ஏற்படும் என கூறினார்.

He also said that people suffering from the virus may have fever, low red blood cell count, low white blood cell count, muscle pain and nerve problems.