சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முக கவசம் அணியாமல் சென்றால் இப்படிக்கூட நடக்குமாம் ..

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா  காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதை கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் போராடும் சூழ்நிலையில் , முழு போக்குவரத்தும் முடங்கியுள்ள காலகட்டத்தில் விமானப் போக்குவரத்தும் முழுவதும் பாதிக்கப்படுள்ளது.

 இருப்பினும் ஒரு சில நாடுகள் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவதை தொடர்ந்து பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால்  பயணிகள் அணைவரும் முகக்கவசம் அணிந்து  சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடுகளுடன் விமான போக்குவரத்து சேவையை செய்துவருகிறது . 

இதன் அடிப்படையில் நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயினின் ஐபிசா தீவுக்கு கே.எல்.எம் என்ற சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் பயணிகள்  அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சொல்லப்பட நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பேர் மட்டும் முககவசம் அணியாமல் சென்றுள்ளனர்.

— The Mic High Club Luchtvaart Podcast (@MicHighClub) August 2, 2020


இதனை கண்ட சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு நபர்களையும்  முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மது போதையில் இருந்த  ஒரு நபர், முககவசத்தை அணிய மறுத்ததோடு மற்ற பயணிகளை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயணிகள் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

விமானத்தில் நடந்த சண்டைக் காட்சிகள் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்  பொழுது எடுக்கப்பட வீடியோ மற்றும்  பயணிகள் சண்டையிடும் காட்சிகளில் குழந்தைகள் மற்றும்  பெண்கள் உள்ளார்கள் தயவு செய்த்து சண்டையில் ஈடுபட வேண்டாம்  என்று பயணி ஒருவர்  தடுக்கும் காட்சிகளுடன் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  

இதனை தொடர்நது விமானம் வரும் வரை காத்துக்கொண்டிருந்த அந்தநாடு போலீசார் விமானம் தரையிரங்கியதும் முககவசம் அணிய மறுத்த பிரிட்டிஷ் பயணி கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

On the flight to the Spanish island of Ibiza in the Dutch capital Amsterdam, he scolded other passengers for not wearing a mask. The enraged other passengers then barraged the person