துருக்கியில் ஒரு பாராகிளைடிங் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தனது வியாபாரத்தை ஒரு ஸ்டண்ட் மூலம் புதிய உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் .அது என்னவென்றால் ஹசன்காவல் என்ற இளைஞருக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியுள்ளது.
ஹசன் காவல் , தனது பாராகிளைடர்களில் ஒரு சோபா மற்றும் டி.வி.யைக் இணைத்து பறப்பதற்கு முடிவு செய்து அதனுடன் உருளை கிழங்கு சிப்ஸ் ,குளிர்பானம் இவை அனைத்தையும் சோபாவிலேயே எடுத்து சென்று வீட்டில் ஓய்வு நேரத்தில் இருப்பதை போன்றே அமர்ந்து கொண்டு சென்றுள்ளார் .
அதே நேரத்தில் முழு விஷயத்தையும் கேமராவில் படம் பிடித்துள்ளார் .பறந்து சென்று ,பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் .வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் வானில் பறந்து சாதனையை படைத்துள்ளார் இந்த துருக்கி இளைஞர் .
பறந்து கொண்டே குளிர்பானத்தை குடித்தும் ,சிப்ஸ் சாப்பிட்டு கொண்டும்,காலணிகளை மாற்றி கொண்டும் ,தொலைக்காட்சியில் 'டாம் & ஜெர்ரி' பார்த்துக்கொண்டும் சில நிமிடங்களை வானில் கழித்ததுள்ளார் . அதற்கு பின் பத்திரமாக தரை இறங்கியுள்ளார் .தரை இறங்கியபின் தான் மிகவும் பத்திரமாக வானில் பறக்கும் பொழுது உணர்ந்ததாக நிதானமாக விவரித்துள்ளார் .
A paragliding instructor in Turkey just took his business to next level .