சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பரிசோதனை செய்யாமலே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்? மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பீதியும் ஏற்படுத்தியுள்ளது

உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா பரவல் வங்களதேசத்திலும் உலுக்கி வருகிறது. அந்த வகையில் வங்களதேசத்தில் இதுவரை ௧ லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து மேல்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது என பல்வேறு தரப்பினர் பல்வேறு  கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் , பரிசோதனைகளும்  குறைந்த a செய்யப்படுவதாகவும், பல உயிரிழப்புகள் கணக்கில் வராமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவர செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பிரபல மருத்துவமனை கொரோனா பரிசோதனை செய்யாமலேயே போலியாக கொரோனா இல்லை என சான்றிதல் கொடுத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பீதியும் ஏற்படுத்தியுள்ளது 

Shocked by the hospital that issued the corona negative certificate without test