சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா இல்லாத நாடா? இயல்பு நிலையில் இருக்கும் மக்கள் 

corona-free-country
  பிரேமா   | Last Modified : 11 Aug, 2020 08:11 am உலகம் இதர நாடுகள்

கொரோனா தொற்று நோய் எவ்வாறு உலகை உலுக்கி வருகிறது என்று அனைவரும் அறிந்ததே . அமெரிக்கா ,இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளிக்கும் நிலையில் கொரோனா இல்லாத நாடா, என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது ஆச்சரியமே .நியூசிலாந்து நாட்டில் வாழும் மக்கள் கொரோனா பரவலில் இருந்து மீண்டு  இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர் .

ஏறக்குறைய 50  லச்சம் மக்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் வாழும் மக்கள் கடந்த 3 மாதங்களாக கொரோனா அச்சமின்றியும் ,சமூக இடைவெளி கடைபிடிப்பு இன்றியும்  வாழ்கின்றனர் .சினிமா தியேட்டர் ,ஷாப்பிங் மால்,உணவகம்  மற்றும் பள்ளிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தன் அன்றாடம் வாழ்க்கையை வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல்  மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் .

நியூசிலாந்து நாட்டிற்கு புதிதாக வருபவர்களை தன்னுடைய எல்லைகளிலேயே தனிமை படுத்தப்படுகின்றனர் .இந்த நாடு தனி தீவாக இருப்பதால் இவர்களை தனிமை படுத்துவது மிக எளிதாக உள்ளது .இவ்வாறு நாட்டிற்குள் வருபவர்களை எல்லைகளிலேயே தனிமைப்படுத்த படுவதால் அங்கு வாழும் மக்கள் எந்தவித அச்சமின்றி அனைத்து இடங்களுக்கும்  சென்று வர முடிகிறது .

கொரோனா வைரஸ் பிரச்சனை தீவிரம் அடைவதற்கு முன்பே அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா துணிச்சலாக நடவடிக்கைகளை எடுத்து எல்லைகளை மூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .தங்கள் நாட்டு மக்களை தவிர ,மற்ற நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டது .நியூசிலாந்து நாட்டு மக்களும் ,14 நாட்கள் தனிமை படுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் நாட்டிற்குள்  செல்ல அனுமதி பிறப்பிக்கபட்டது .அதுமட்டுமின்றி கடந்த மூன்று மாதங்களாக புதிதாக கொரோனா நோயாளிகள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை.அதனால் தான் அந்நாட்டில் கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என கூறுகின்றார்  அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா  .

அந்நாட்டு மக்கள் முறைப்படி அரசு வழிமுறைகளை பின்பற்றியதால் இப்பொழுது நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடக மாறியுள்ளது .மக்களுக்கு சிறந்த அடிப்படை அறிவியல் அறிவு மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் தலைமை தான் அந்நாட்டை மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது .இதனால் ,உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்கு  நியூசிலாந்து நாட்டிடம் ஆலேசனைகளை பெற்று வருகிறது .

Everyone knows how the corona epidemic is shaking the world. It is no wonder that countries like the United States and India are staggering from being able to get out of the corona infection.