சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனவால் வால்மார்டின் உருமாற்றம்

அமெரிக்காவின் இரண்டு பிரசித்தி பெற்ற விஷயங்களான (அமெரிக்க பன்னாட்டு  நிறுவனம் ஆன வால்மார்ட் மற்றும் டிரைவ் -இன் தியேட்டர்கள் )ஒன்று சேர போகிறது . இந்த டிரைவ் -இன் தியேட்டர்  கோடையில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருக்கிறது  .வால்மார்ட் தனது 160 அமெரிக்க ஸ்டோர்களின் வாகன நிறுத்துமிடங்களை டிரைவ்-இன் திரைப்பட  அரங்குகளாக மாற்ற இருக்கிறார்கள் .இந்த கொரோன தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையிலும் ,  வழக்கமாக இயங்கி வரும் திரைப்பட அரங்குகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும் நிலையிலும் , இந்த டிரைவ் -இன் தியேட்டர்கள் உருவாக்க இருக்கிறார்கள் .
அமெரிக்க பன்னாட்டு  நிறுவனம் ஆன வால்மார்ட் மற்றும்  ராபர்ட் டி நிரோ ஆதரவு ஊடக நிறுவனமான டிரிபெகா எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து படங்களை உருவாக்க திட்டமிட்டு  உள்ளது.ஆனால் திரைப்பட தலைப்புகள் மற்றும் இடம் சம்பந்தமான விஷயங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை .அவை சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகச்சிறப்பு பெற்ற இணையதளத்தில் பின்னர்  வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வானது அக்டோபர் வரை இயங்கும்  என்றும் ,அதில் 300 க்கும் மேற்பட்ட காட்சிகளை உள்ளடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர் .

வால்மார்ட் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ,  "இரவில் குடும்ப பாங்கான ஹிட்  திரைப்படங்கள் திரையிடப்பட்டும் . இத்துடன் வாடிக்கையாளுக்கு சிறப்பான  சலுகைகள் வழங்கப்படும்" என்று வால்மார்ட் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் இதர பொருட்களை பெற்றுக்கொள்ள ,வால்மார்ட் அதன் அருகிலுள்ள  கடைகளின், கார் நிறுத்தும் இடத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது .
டிரைவ்-இன் திரையரங்குகள்   நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.சிறு வணிக உரிமையாளர்கள் தங்களது திரைப்பட அரங்குகளை கொரோன தொற்றுநோய் காரணமாக  தற்காலிகமாக நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியதால், பழைய டிரைவ்-இன் இடங்களை மீண்டும் திறக்க (அல்லது) வாகனங்களை நிறுத்தும் இடங்களில் டிரைவ்-இன் திரையரங்குகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள் .

Two of the most popular things in the US (Walmart and Drive-In Theaters) are about to join .