அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் இல் கரடியானது காட்டுப்பகுதில் இருந்து உணவுக்காக நகரத்தினுள் புகுந்துள்ளது .
தற்போதய சர்வதேச பரவல் நோய் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்த காரணத்தினால் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது .கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கரடியானது அர்க்காடிய என்ற ஷாப்பிங் சென்டரின் அருகே வலம் வந்ததை கண்ட மக்கள் அலறியடித்து ஆரவாரம் செய்யாமல் புகைப்படம் எடுத்துள்ளனர் .அதனை வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர் .
அங்கு மக்கள் பெருமளவில் இல்லாததால் எந்த ஆரவாரமும் நடைபெறவில்லை .கரடி யாரையும் பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ இல்லை . எந்த பொருளையும் சேதப்படுத்துவும் இல்லை .
அந்த கரடி, ஷாப்பிங் சென்டரின் அருகே வலம் வந்ததை பார்த்து ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார் .அதை பலரும் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர் .
A bear was roaming an Arcadia Shopping center in Sunday .