சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவிலிருந்து அயல் நாட்டு மாணவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

foreign-students-have-been-ordered-to-leave-the-us
  அருண்   | Last Modified : 07 Jul, 2020 12:28 pm உலகம் அமெரிக்கா

உலகெங்கும் கொரோனா வைரஸ் காட்டு தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது.இதன் காரணமாக பல நாடுகளில்  பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன,

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், அணைத்து பல்கலை கழகங்களின் வகுப்புகள் ஆன்லைன் மூலம்  மட்டுமே நடைபெறுகிறது இதன் காரணமாக அயல் நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

எஃப்-1 மற்றும் எம் -1 விசா பெற்று அமெரிக்கா பல்கலைக்கழகத்தில்  படிக்கும் அயல் நாட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமே  வகுப்புகள் நடத்தபடுவதால் இனி தொடர்ந்து இங்கு தங்கி இருக்கமுடியாது மேலும் உடனடியாக தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நாடு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

அம்மாதிரிஆன்லைன்  வகுப்பு நடத்தும் பல்கலை கழகங்களில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் அல்லது நேரடியாக வகுப்பு நடத்தும் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 
மேலும் அமெரிக்கா நாட்டில் பள்ளி அல்லது கல்லூரி  யில் சேர்ந்து பயில இனி விசா வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளது 

 

Due to the high prevalence of coronavirus in the United States, the government has ordered foreign students to leave their country immediately, with the university's classes only taking place online.