சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

கடந்த சில    நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .அதாவது ,எஃப்-1 விசா பெற்று அமெரிக்கா பல்கலைக்கழகத்தில்  படிக்கும் அயல் நாட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமே  வகுப்புகள் நடத்தபடுவதால் இனி தொடர்ந்து இங்கு தங்கி இருக்கமுடியாது மேலும் உடனடியாக தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நாட்டு அமலாக்கத்துறை  குறிப்பிட்டது .

அம்மாதிரி ஆன்லைன்  வகுப்பு நடத்தும் பல்கலை கழகங்களில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் அல்லது நேரடியாக வகுப்பு நடத்தும் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது .

மேலும் அமெரிக்கா நாட்டில்  கல்லூரியில் சேர்ந்து பயில இனி விசா வழங்கப்படாது எனவும் அறிவித்ததை அடுத்து , இது  பெரிய அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் பல்கலைக்கழகதிற்கு வரும் வருவாயில் இழப்பு ஏற்படுவதால் அமெரிக்கா நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் வழக்கு தொடுத்ததது.

இப்பொழுது இருக்கும் கொரோன தொற்று நோய் சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு அவர்கள் வெளியேற முடியாத காரணத்தினாலும் ,மாணவர்களின் நலன் கருதியும் நடைமுறைப்படுத்த அனுப்பப்பட்ட நிர்வாக உத்தரவு இப்பொழுது பின்வாங்கபட்டுள்ளது .இதனால் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் .ஆனால்  வெளி நாடுகளில் இருந்து வரும் மாணவர்களின்  புதிய வருகைக்காண உத்தரவில் மாற்றம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை .இன்னும் சில நாள்களில் புதிய மாணவர்கள் வருகைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர் பார்க்கபடுகிறது .

A good news for students studying in the United States of America