சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

6 வயதே ஆன சிறுவன் தனது 4 வயது சகோதரியை காப்பாற்றிய அதிசயம்!

அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தை சேர்ந்த பிரிட்ஜ்ர்  வாக்கர்  என்ற  6  வயது சிறுவன் தனது 4 வயது சகோதரியை நாயிடம் இருந்து காப்பாற்றியுள்ளார் .

தனது சகோதரியை நாய் தாக்க முயன்ற போது பிரிட்ஜ்ர் என்ற 6  வயதே ஆன சிறுவன் தன் சகோதரியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது நாயால் கொடூரமாக தாக்கப்பட்டார் .ஆனாலும் தன்னுடைய உயிரே போனாலும் பரவாயில்லை தன் சகோதரியை  காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அவ்வாறு ஈடுபட்டபோது நாயானது பிரிட்ஜ்ர் கன்னத்தை கிழித்து தாக்கியுள்ளது .

பின்னர் பிரிட்ஜ்ர் 2 மணி நேர அறுவை சிகிச்சையில் 90 க்கும் மேற்பட்ட தையல் தேவைப்பட்டது .அதற்கு அவர் தந்தை ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டபோது, "யாராவது ஒருவர் இறக்க நேரிட்டால் அது நானாக இருக்க வேண்டும்  என நினைத்தேன் "என்று பிரிட்ஜ்ர் கூறியிருக்கிறார் .


இப்படியொரு அன்பான சகோதரன் கிடைத்து விட்டால் இந்த உலகில் பிறந்த அனைத்து பெண் பிள்ளைகளும் தைரியமாக இருக்கலாம் .

A 6-year-old boy saving his 4-year-old sister from a dog attack .