சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் நுழைய தடைவிதித்த டிரம்ப் அரசு -அதிரடி முடிவு

அமெரிக்க நாடு வேலைவாய்ப்பு மட்டும் இல்லாது உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை கற்க சிறந்த இடமாக இருக்கிறது .. இதனால்  அமெரிக்காஅரசு  வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்கள் வழங்கி வருகிறது.

 இதில் அதிக அளவில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே  இந்த விசா மூலம்  அமெரிக்காவில் படித்து வருகின்றனர்.  அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள்  அமெரிக்கா சென்று படிக்கின்றனர்.

சில மாதங்களாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால்  அங்கு கல்வி கற்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் அச்சம்  காரணமாக அமெரிக்காவில் உள்ள அதிகப்படியான பல்கலைக் கழகங்கள் நடப்பு கல்வியாண்டிற்கான பாட வகுப்புகளை  ஆன்லைன் மூலம் எடுத்து வருகின்றன.

இது ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மேலும்  அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க குடியுரிமைத்துறை கடந்த மாதம் கூறி இருந்தது

இது மாணவர்களுக்கு மட்டுமின்றி  அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனால் அரசின் முடிவை எதிர்த்த ஹார்வர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

50-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக  திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பபெறுவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும், அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களும் நிம்மதி அடைந்தன.

இந்த சூழ்நிலையில்  அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக கல்விகற்பதற்கு என  வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


இதை தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், “மார்ச் 9-ந் தேதிக்கு பின்னர் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்படமாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அதேசமயம் மார்ச் 9-ந் தேதிக்கு முன்னர் கல்வி விசாக்களை பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு எந்தவிதமான தடையும்  இல்லை என அந்நாட்டு அரசு  தெரிவித்துள்ளது .

அந்நாட்டின்  இந்த முடிவு  அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் புதிய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Under these circumstances, foreign students will not be allowed to enter the United States as new entrants to online universities across the United States.