சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சியா?

அமெரிக்காவில் தற்போதைய கொரோனாவின் கோரப்பிடியில் உள்ளது.இந்த நெருக்கடியான சூழலில்  அமெரிக்கா அதிபர்க்கான  தேர்தலும் நடக்கவுள்ளது.இதில் பல்வேறு காரணங்களால் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  பின் தங்கினாலும், அவரே மீண்டும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே மீண்டும் ஒரு  வாய்ப்பை வழங்குவார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளது .ஆயினும்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே  கணித்து கூறப்படுகிறது.

முந்தய 2016 தேர்தலில் இருந்த பிரச்சாரத்தை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. 

ஆனால் எதிர்கட்சி  ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் சொல்லும்படியான உற்சாகம் இல்லை என  கூறப்படுகிறது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த  கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிர்க்கட்சி தலைவரான  ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் அதன்  பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக 
CNN ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களிலும் வெற்றிபெற்றுஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ..

தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருந்து வருகிறார். ஆயினும் பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Even if President Donald Trump stays behind, he will return to power, according to opinion polls.