சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அயல் நாட்டு பணியாளர்கள் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்

 அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்று அந்நாட்டு பணியாளர்களை  நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வெளிநாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா அதிபர் டிரம்ப், வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் .

மேலும் அமெரிக்காவில்  வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஆல் பொருளாதாரம்பின் தங்கியுள்ளது இதனால் அந்நாட்டில் பலர் வேலையிழந்துள்ளனர். மேலும் வேலை இழப்புகளை தடுக்க அந்நாட்டு அரசு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதனை ஏராளமானோர் தொழிலதிபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற தனது பழைய பிரசாரத்தை கையிலெடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்.

இந்தசூழ்நிலையில்   அமெரிக்க அரசுக்கு சொந்தமான டிவிஏ என்ற நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூன் மாதம் 62 ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, டேட்டா மற்றும் புரோகிராமிங் சம்பந்தமான வேலைகளை வெளிநாட்டவர்கள் மூலம் குறைந்த விலைக்கு செய்துள்ளது. இந்த விஷயம் அதிபர் டிரம்ப் காதிற்கு வந்ததும், டிவிஏ-யின் சி.இ.ஓவை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார்,  மேலும் நிறுவனத்தின் தலைவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.

மேலும்  அரசு நிறுவனங்களின் எந்தெந்த பணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை ஆராய  உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த  பணிகளில் அமெரிக்கர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் எச்-1 பி விசா நடைமுறையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகக்கூடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

U.S. government agency has laid off its employees and replaced them with foreign workers. Outraged, President Trump has imposed new restrictions on the use of foreign workers.