சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் களம் இறங்கும் இந்திய வம்சத்தை சேர்ந்த பெண்

உலகில்  உள்ள அனைத்து நாடுகளுமே அமெரிக்கா தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறது,ஏனெனில் இந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் உலகில் உள்ள நாடுகளின் அரசியலில் எதிரொலிக்கும் என்பது தான் காரணம்.

அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது,இந்த தேர்தலில்,இப்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் உம் ஜோ பிடனும் போட்டி இடுகின்றனர்.இந்த சூழ்நிலையில் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டி இட உள்ளார் என்று வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.  

கமலா ஹாரிஸ் முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையை சேர்ந்தவர்கள் ,இவரது தாய் சியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் இவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைகாவாய் சேர்ந்தவர் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார் .  

கமலா ஹாரிஸ் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றுள்ளார் மேலும் சான் பிரான்சிஸ்கோவில் வழக்கறிஞர் ஆக பணியாற்றியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஜோ பிடன்  துணை அதிபர் பதவிக்கு  இந்த முறை பெண் ஒருவரையே தேர்வு செய்ய போவதாக முன்பே கூறி  இருந்த நிலையில் இப்பொது கமலா ஹாரிஸ் ஐ தேர்ந்தெடுத்துள்ளார்,

முதலில் இவர் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பியுள்ளார்  ஆனால் ஜோ பிடன் போட்டி இடுவதால் இவர் பின்வாங்கிவிட்டார்.மேலும் இவர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக நிறைய குற்றசாட்டுகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிஃபோர்னியாவில் ஏற்கவே அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் பணியாற்றியுள்ளார், மேலும் இவர் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரக்குழு  புலனாய்வு நிதித்துறை மற்றும் பட்ஜெட் குழு இவற்றில் பணியாற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல்  பெண் துணை அதிபரும் இவரே என்ற பெருமைக்கு உரியவராவார்.

President Joe Biden has now chosen Kamala Harris to run for vice president, having previously said she would choose a woman.