சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கணவன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம்

incident-in-which-a-husband-shot-his-wife
  பிரேமா   | Last Modified : 13 Aug, 2020 11:42 am உலகம் அமெரிக்கா

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இப்பொழுது இணைய வழியிலேயே வகுப்புகள் கற்பிக்க தொடங்கியுள்ளதை அடுத்து ,அமெரிக்காவில் இப்பொழுது கோடை விடுமுறை முடிந்து இணைய வழி வகுப்புகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன .இவ்வாறு இணையவழி வகுப்புகள் புளோரிடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது .

புளோரிடா மாகாணம்  அமெரிக்காவில் 5 ,42,000 க்கும் அதிகமானோர் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.
வார்ஃபீல்ட் தொடக்கப்பள்ளியில் பயின்ற 10 வயது மாணவி,தனது முதல் நாள் ஆன்லைன் வகுப்பில்  தன் தாயுடன் பாடங்களை கவனித்து கொண்டிருந்த போது  அந்த தாய் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அந்த மாணவியின் ஆசிரியர் கூறியதாவது ,அந்த மாணவி பாடங்களை கவனித்து கொண்டிருந்த போது  வீட்டில் அதிகமான சத்தம் கேட்டதால்   ஆசிரியர் மியூட்(mute )பொத்தானை அழுத்தியதாக கூறுகிறார் .இதனால் அங்கு என்ன நடந்தது என கேட்கவில்லை .இறுதியாக அந்த 10  வயது சிறுமி காதின் இருபக்கமும் தன் கைகளை வைத்து அடைத்து கொண்டு பாடங்களை கவனித்து கொண்டிருப்பதை கண்டுள்ளார் .அதற்கு பிறகு காணொளியும் கருப்பு திரையாக  வந்ததாக கூறியுள்ளார் .

டொனால்ட் வில்லியம்ஸ் என்பவர்  தனது முன்னாள் காதலியை சந்திக்க தன்  வீட்டிற்குச் சென்றபோது தான், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தன் மனைவியை துப்பாக்கியால்  சுட்டுள்ளார் .அதற்கு பிறகு வில்லியம்ஸ் தப்பி செல்ல  நகர பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் சைக்கிளில் தப்பி ஓடியதாக சிசிடிவி யில் பதிவாகியுள்ளது .


அதற்கு பிறகு வில்லியம்ஸ் பேருந்து ஓட்டுனரை ,ஓட்டுநர் செல்லும் வழியை தவிர்த்து வேறு இடத்திற்கு  அழைத்துச் செல்லுமாறு கோரியுள்ளார் .இதனால் , ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அப்போது  வில்லியம்ஸ் ஒரு ஸ்வாட் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

அவர் அனுபதி இல்லாத துப்பாக்கி வைத்திருந்த காரணத்தாலும் ,ஆயுதக் கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய வீட்டு படையெடுப்பு ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் .குழந்தைகள்  முன் தாயை கொலை செய்த காரணத்தினால்,சம்பவத்தை பார்த்த சாட்சியும் இருப்பதால் தண்டனை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர் .

Following the spread of the corona epidemic, online classes have now resumed in the United States after the summer holidays.