சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கலிபோர்னியாவை விட்டு செல்லும் எலன் மஸ்க்

 

டெஸ்லா கார் என்றால் தெரியாத கார் பிரியர்கள் இல்லை என்று கூறலாம், ஏனெனில் அனைத்து கார் பிரியர்களின் கனவு கார் டெஸ்லா தான். பார்க்க மிக அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இந்த கார் முதலில் பல சர்ச்சைகளுக்கு பேர் பெற்றதாக இருப்பினும், இப்போது அதை தூற்றிய மற்ற கார் கம்பனிகள் இன்று எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவே மிக பெரிய சாதனை என்கிறார்கள் சூழியல் ஆய்வாளர்களும் எலன் மஸ்க் ரசிகர்களும். 

ஐயன் மேன் புகழ் பெற்ற டோனி ஸ்டார்க் கூட பலமுறை நான் நடித்த ஐயன் மேன், எலன் வாழ்க்கையை வைத்து கற்பனை செய்யப்பட்டது என்று கூறி இருக்கிறார்  .

உலக முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் சமீபத்தில் இடம்பிடித்த இவர், தற்போது இவரின் லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களாவை விற்று விட்டு டெக்சாஸ் மாகாணத்தில் வீடு வாங்கி விட்டதாக கூறுகிறார்கள் .

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் விட்டு செல்வதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இவருக்கும் கலிபோர்னியாவில் இருக்கும் அலமேடா மேயருக்கும் நடந்த சர்ச்சையால் இவர் கலிபோர்னியா வேண்டாம் டெக்சாஸ் சென்று விடலாம் என்று, அவரின் புதிய தொழிற்ச்சாலையை டெக்சாஸ் மாகாணத்தில் துவக்கிஇருக்கிறார் என்று கூறுகிறார்கள் . 

கொரோனா காலத்தில், இவர் பாதுகாப்பாக தன்னுடைய தொழிற்ச்சாலை தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்வததாக சொன்னாலும், அரசியல்வாதிகள் இதை ஏற்கவில்லை, இதனால் இவருடைய கலிபோர்னியா தொழிற்சாலை எதிர்பார்த்த அளவு கார்களை உற்பத்தி செய்யவில்லை. 

மேலும் தற்போது நிலவும் வறுமை மற்றும் வேலை இழப்பால் பலபேர் வீடுகளை இழந்து முகாம்களிலும் சாலைகளிலும் வசிப்பதாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகிறது .

எது எப்படியானாலும் எலன் மஸ்க் கண்காட்டினால் தங்கள் இடத்திற்கு வரவேற்க பல அமெரிக்கா மாகாணங்கள் தயாராக இருப்பது அனைவரும் அறிந்ததே .
 

Elon musk choose Texas over california for his new factory, also sources says he sold his los angeles home and bought a house in texas. This could be due to the increased demand for elon in Texas with politicians invite.