சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டு தீ

usa-struggling-in-forest-fire
  பிரேமா   | Last Modified : 18 Aug, 2020 01:12 pm உலகம் அமெரிக்கா

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின்  ,லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் பல்லாயிரம்  ஏக்கருக்கு மேல் தீ பற்றி  எரிகிறது.இதனை அணைக்க தீயணைப்பு துறையினர்
போராடி வருகின்றனர் .அமெரிக்காவில் காட்டு தீ என்பது மிகவும் புதிதல்ல .இது வருடா வருடம் நடக்கும் ஒரு நிகழ்வாகவே உள்ளது .இதனால் வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் .

லாஸ் ஏஞ்சல்ஸ்  வனப்பகுதியில்  வார இறுதியில் காட்டுத்தீ 18,000 ஏக்கருக்கு மேல் பரவியதால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர் .ஹியூஸ் ஏரிக்கு அருகே , லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே , சுமார் 65 மைல் தொலைவில் இந்த ஏரி தீயானது , இரவு 7 மணி நிலவரப்படி 18,361 ஏக்கர்களை எரித்துள்ளது.  லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வன அமைப்பு அறிக்கை அறிவிப்பின் படி, காட்டுத்தீ 12 கட்டடங்களையும் , 21 வெளிப்புற அமைவுகளையும்  அழித்துவிட்டது. 

அங்கு தீ பரவியதற்கான அதிகார கூறுகள் ஏதும் இல்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது . தீயை அணைக்க கடுமையாக போராடி வந்தாலும் அங்கு இருந்த  வளமான மரங்களின் வளர்ச்சியால் 12 % மட்டுமே அணைக்க முடிந்துள்ளது .இதுவரை அந்த இடத்தில் காட்டு தீ பரவிய வரலாறு கூட இல்லை . 

அதிக வெப்பநிலை அபாயம் :

காட்டு தீ அதிகம் பரவுவதால் அதிக வெப்பநிலை அபாயமும் ,கொரோனா அச்சுறுத்தலும் மக்களிடையே அதிகரித்துள்ளது . லாஸ் ஏஞ்சல்ஸ் வனப்பகுதி எச்சரிக்கையின் படி சனிக்கிழமை கடுமையான காற்று வீசியதால் இந்த காட்டு தீயானது பரவியுள்ளது .இதனால் அதிகப்படியான வெப்பநிலை நிலவி வருகிறது .

வேறொரு  இடத்தில் கலிபோர்னியா காட்டுத்தீ நெவாடா எல்லைக்கு அருகிலுள்ள ப்ளூமாஸ், லாசென் மற்றும் சியரா மாவட்டங்களின் பகுதிகள் வழியாக பரவி  கிட்டத்தட்ட 30,000 ஏக்கருக்கு பரவியுள்ளது .இதில் 0 % கூட அணைக்க படவில்லை என்று பத்திரிக்கை வெளியிட்டுள்ளது .

Tens of thousands of acres are on fire in the Los Angeles National Forest in Southern California