சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் வேலையின்மையால் நடக்கும் கொடுமைகள் 

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது .இதனால், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு பெருமளவு ஆபத்து ஏற்படுகிறது .தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருவதால் தனியாக செல்லும் நபரை வழிமறித்து தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றனர் .அமெரிக்காவில் இது போன்று சம்பவங்கள் அதிகரித்து வருவது திரைப்படத்தில் வருவதை காட்டிலும் மோசமான நிலைமையில் உள்ளது .

அமெரிக்காவில் தொடர்ந்து வரும்  துப்பாக்கி கலாச்சாரத்தால் பெருமளவு ஆபத்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது .துப்பாக்கியை காட்டி பல கார்களை திருடுவது மற்றும் அந்த நபர் கார் சாவி தர மறுத்தால் அவரை துப்பாக்கி முனையில் அசச்சுறுத்துவது போன்ற பல்வேறு சம்பவங்கள் வேலையின்மையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன .

அமெரிக்காவில் வடக்கு  கரோலினாவில் உள்ள கேரி நகரில் அமெரிக்கா தமிழர் செல்வராஜ் வெள்ளியங்கிரி என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் . இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்றுள்ளனர் .துப்பாக்கியால் சுட்டவர் யார் என்ற விவரம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை .இது குறித்து விசாரித்து வருகின்றனர் .

மற்றொரு சம்பவம் இந்தியர் ஒருவர் அவர் வசிக்கும் வீட்டின் அருகில் நிறுத்த பட்டிருந்த அவருடைய காரை யாரோ ஒருவர் எடுக்க நினைப்பதை பார்த்த அவர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க மறந்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார் . அப்பொழுது தாக்கப்பட்டு பேராபத்து ஏதுமின்றி  காயங்களுடன் தப்பித்துள்ளார் .இது போன்று பல விதமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன .

அது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் மற்றும் சீனர்களை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர் .இது போன்ற பாதுகாப்பின்மை தொடர்ந்து அமெரிக்காவில்  அதிகரித்து வருகின்றது .

Unemployment continues to rise in the United States due to the Corona epidemic. Thus, expatriates living in the United States are at greater risk.