சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

67 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அமெரிக்கா.

the-united-states-has-sentenced-a-woman-to-death-after-67-years
  India Border அருண் குமார்   | Last Modified : 18 Oct, 2020 11:38 am உலகம் அமெரிக்கா

மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த லிசா மோன்ட்கோமேரி வயது43, என்ற பெண் தான் கர்ப்பமடையாதததால் 8 மாத கார்ப்பிணியாக இருந்த பாபி ஜோ ஸ்டின்னெட் வயது 23, என்பவரின் கழுத்தை நெரித்து கொன்று, கத்தியால் அவரது வயிற்றைக் கிழித்து கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டார்.

திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று தன் குழந்தைபோல் காட்டிக்கொண்டு வளர்த்து வந்துள்ளார். பாபி ஜோ ஸ்டின்னெட்  கொலை செய்த வழக்கில் லிசா மோன்ட்கோமேரி என்ற பெண்ணை கைது செய்து குற்றம் நிருபிக்க பட்டு கடந்த 2007ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் மாதம் 8ம் தேதி விஷ ஊசி மூலம் லிசாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு  பாபி ஜோ கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என்ற அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது.

1953ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு பெண்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை. 17 ஆண்டுகளாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார் டிரம்ப். ஜூலைக்குப் பின் ஏழு கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இப்போது, 70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

For the first time since 1953, a woman has been sentenced to death in the United States.