இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழக வீரர் பழனி, கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரண எய்தினர்.இதனால் இந்திய படைவீரர்களும் சீனா மீது திருப்பி தாக்குதல் நடத்தினர் இதில் 35 வீரர்களை இந்திய ராணுவம் கொன்று குவித்துள்ளது என அமெரிக்கா தூதுரகம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவலின் அச்சுறுத்தல் காரணமாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் இந்த நிலையில் மீண்டும் அவர் நேற்று முன்தினம் தனது அதிபர் பிரசாரத்தைதொடங்கினார். பிரச்சாரத்துக்கு செல்லும் முன்பாக அவர் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில்,
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீனா இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது .அங்கு தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் இருந்து விடுபட இந்திய சீனா வுக்கும் அமெரிக்கா உதவும் எனவும் மேலும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா பொறுமையுடன் கண்காணித்து வருவதாகவும் இதுபற்றி அமெரிக்கா அவர்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது எனவும் அவர் கூறினார் .
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் சூழ்நிலையை பயன்படுத்தி, பக்கத்து நாடுகளுடன் எல்லை பிரச்னையை தூண்டிவிட்டு அதன் மூலம் சீனா அரசு பலன் அடையப் பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் கொரோனா பாதிப்பு இருக்க மறுபக்கம் கருப்பர் இனத்துக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் என கடினமான சூழ்நிலையில் டிரம்ப் தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினார்.அதில் அவர் முன்பைவிட இப்போதுதான் அமெரிக்கா முழு வலுப்பெற்றுள்ளதாகவும் மேலும் என்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேன் ஒரு கைப்பிள்ளை அவர் பழமைவாத தீவிரவாதத்தின் பிடியில் உள்ளார் என்றும் கூறியுள்ளார் .
Trump has aggressively stated that the US will help India to overcome the border disputes at the Ladakh border.