சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை முறியடிக்கப்போகும் ரஷ்யா அதிரடி

உலகமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 120 நிறுவனங்கள் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பத்தலில் தீவிர முனைவு காட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்யா நாடு கண்டுபிடித்த தடுப்பு ஊசியை மனிதர்கள் மேல் சோதனை செய்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்துள்ளது.


ரஷ்யாவில் உள்ள செச்சனோவ் பகுதியில் இருக்கும் மருத்துவ பல்கலைக்கழத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்தார்கள். 33 தன்னார்வாளர்கள் மீது செலுத்தி அவர்வள் குணமடைந்ததாக தகவல் வந்துள்ளது.

முதற்கட்டமாக 18 பேரை ஜூலை மாதம் 15 ஆம் தேதியும்,  இரண்டாம் கட்டமாக அடுத்த 15 பேரை ஜூலை மாதம் 20 ஆம் தேதியும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

3 மாத காலமாக ஆராய்ச்சி செய்து இந்த மருந்தை தயாரித்து ஜுன் மாதம் 18 ஆம் தேதியில் மனிதர்கள் மீது செலுத்தி சோதனையை ஆரம்பித்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து சோதனையையும் மேற்கொண்ட மருந்தை செலுத்திய பின்பு நோயாளிகள் ஆரோக்கியமாவும் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மருந்தின் பெயரும் அது எப்போது விற்பனைக்கு வரும் என்னும் தகவல்கள் ஏதும் அறிவிக்கவில்லை.  கொரோனாவிற்க்கு மருந்து தயாரித்து அதை மனிதர்கள் மீது செலுத்தி அதன் முடிவு தெரிவதற்கு குறைந்தது  10 மாதம் ஆகும் என்று அறிவிக்கை வந்த நிலையில் ரஷ்யா எப்படி 3 மாதத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 30 நாட்களில் சரி செய்ற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Russia tested corona patients with their new vaccines