சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பயணிகளின் கொரோனா மருத்துவ செலவை நாங்கள் ஏற்போம் - எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை

கொரோனா வைரசால்  உலகம் முழுவதும் பாதித்து கொண்டு இருக்கும்  நிலையில் விமான தொழில் கடுமையாக சரிந்துள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன்  ஒருசில விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி  வருகின்றன. ஆயினும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.

இந்த சூழ்நிலையில்  விமான பயணத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக  1.3 கோடி ரூபாய் வரை வழங்க உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி 8,691 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31.10.2020 வரை எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கும் பயணிகளுக்கு  இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 மேலும் பயணத்தின் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால் , அவர்கள் உதவி மற்றும் பாதுகாப்பு பெற ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான நிறுவனம் கூறி உள்ளது. இந்த மருத்துவ செலவை கோர விரும்பும் பயணிகள்  மேலும் விவரங்களை எமிரேட்ஸ் இணையதளத்தில் காணலாம்.
 

The airline also said that if it was confirmed that a corona infection had occurred during the flight, they should contact a dedicated hotline for help and protection. Travelers who wish to claim this medical cost can find more details on the Emirates website.