கொரோனா சீனாவில் ஜனவரி மாதத்தில் பரவ தொடங்கி 8 மாதம் நிறைவடையும் நிலையில் உள்ளது .ஆனாலும் கடந்த 6 மாதங்களாக கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றன .இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்த ஒருநாடும் மருந்தை வெளியிடவில்லை .
இதன் தொடர்பாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க இயலாமலும் போகலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் .
உலகம் முழுவதும் ஏற்படும் கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் .கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் கொரோனாவின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகவும் ,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியன்களாகவும் ,உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6 ,80 ,000 ஆகவும் அதிகரித்துள்ளது .
கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார் .கொரோனா வைரஸை பற்றி ஒவ்வொருநாளும் புதிதாக தெரிந்து கொள்வதாக கூறியுள்ளார் .கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சையில் அனைத்து நாடுகளும் முன்னேறி வருவதாக கூறியுள்ளார் .
அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன என்றும் கொரோனாவிற்கு சரியான தடுப்பு மருந்து கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார் .மேலும் கொரோனாவிற்கு சரியான தடுப்பு மருந்து இதுவரை கிடைக்கவில்லை என்றும் ,இறுதிவரை கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார் .
அதுவரை மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார் .உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து நோய்கட்டுப்பாட்டின் அவசியம் மற்றும் அறிவுறுத்தல்களை அரசு மேற்கொள்ளவேண்டும் .மக்கள் போதிய இடைவெளியை கடைபிடிப்பதுடன் ,முகக்கவசம் அணிவது ,கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார் .
The corona started spreading in China in January and is nearing completion in 8 months.