சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் புதிய மருந்தா?

கொரோனா பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ஆபத்து  நிலையில் உள்ள நோயாளிகளுக்காக அமெரிக்க மருத்துவர்கள் ஆர்எல்எப்-100 எனும் மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.ஆர்எல்எப்-100 எனும் இந்த மருந்து அவிப்டாடில்(aviptadil) என்றும்  கூறப்படுகிறது 

மேலும் இந்த அவிப்டாடில் மருந்து உயிருக்குப் போராடும் ஆபத்து நிலையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு அளிக்க அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம்  அனுமதியளித்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முதன்முதலாக ஆர்எல்எப்-100 மருந்தை, ஆபத்து நிலையில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து  பரிசோதித்தனர். இந்த மருந்து கொடுக்கப்பட்ட  சில தினங்களிலேயே  நுரையீரல் பாதிப்பிலிருந்து மிக வேகமாக குணமடைவதை கண்டு  மருத்துவர்கள் வியப்படைந்தனர்.

மேலும் இந்த அவிப்டாடில் மருந்து என்பது வாஸ்கோ இன்டெஸ்டினல் போலிபெப்டைட்(VIP) கலவையைக் கொண்டது. அதாவது நுரையீரலில் அலர்ஜீ , அடைப்பு போன்றவை இருந்தால் அதை நீக்க கூடியது . நியூரோ ஆர்எக்ஸ், மற்றும் ரிலீப் தெரப்படிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளன.

மேலும் பதினைந்துக்கு மேற்பட்ட  கொரோனா வெண்டிலேட்டர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதனை செய்துள்ளனர்,இதன் மூலம் அந்த நோயாளிகள் நான்கு நாட்களில் வெண்டிலேட்டர் சிகிச்சை இல்லாமல் மீண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் இருக்கும் தொற்றை வேகமாக குறைத்ததோடு இல்லாமல் , ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக 50 சதவீதம் அதற்கும் மேலாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

U.S. doctors have begun using RLF-100, a drug known as aviptadil, for patients with corona infection and life-threatening patients.