சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

4 மதத்திற்கு முன் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் உயிருடன் திரும்பினார்!!!

எகிப்தில் 4 மாதங்களுக்கு முன்னர் முகமது எல் கம்மல் என்ற  ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்பியதை கண்டு அதிர்ந்து போனார்கள். 


எகிப்தில் வாழும் முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணமாகி  பிள்ளைகள் உள்ளனர். இவர் ஆசிரியராக பணியாற்றிவந்த நிலையில் இவருக்கு தீடிரென மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து அடிக்கடி வெளியில் சென்று விடுவார். இவரை குடும்பத்தார் தேடி அழைத்துவருவார்கள்.

இதேபோல் இவர் கடந்த ஜனவரி மாதம்  வீட்டை விட்டு வெளியேறினார் இவர் குடும்பத்தார் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது உறவினர் ஒருவர் அங்குள்ள மருத்துமனையில் வேலை பார்த்துவருகிறார்.அவர்  முகமது எல் கம்மல் குடும்பத்தை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு  இங்கு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று வந்துள்ளது தங்கள் நேரில் வந்து அடையாளம் காண்பிக்குமாறு தகவல் தெரிவித்தார்.பின்னர் அங்கு வந்த  முகமது எல் கம்மல் குடும்பத்தார் இது அவரின் சடலம் தான் என முடிவுக்கு வந்தனர் அனல் அவரின் இரண்டு சகோதரிகள் மட்டும் நம்பவில்லை பின்னர் அவரின் சடலத்தை கடந்த மார்ச் 21 தேதி அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அங்குள்ள காஃப்ர் அல்-ஹோசர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டில் முகமது எல் கம்மல் சுற்றி கொண்டுஇருந்தார். இதனை பார்த்த அங்குள்ள இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.பின்னர் அவர் குடும்பத்தார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் முகமது எல் கம்மலை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகமது எல் கம்மலை அவரது குடும்பத்தினரோடு ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Relatives are shocked to find that Mohammed El Kammal, who died 4 months ago in Egypt, has returned alive after burying his body.