சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

கடந்த 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, பெய்ரூட்டில் நடத்தப்பட்ட கார் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி மற்றும் 21 பேர் கொல்லப்பட்டார்கள்.

கார் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.இதில் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் குற்றம் சாற்றப்படிருந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா தீவிரவாத குழுவைச் சேர்ந்த  நான்குபேரில் ஒருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2015ஆம் ஆண்டு முதல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹெஸ்போலா குழுவை சேர்ந்த சலீம் அய்யாஷ் உட்பட மேலும் மூவருக்கு எதிரான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதனை தொடர்ந்து ரஃபீக் ஹரிரி உட்பட 22 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது  226 பேர் காயம் அடைந்த இந்த கார் தற்கொலை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அய்யாஷ் குற்றவாளி என்றும் மேலும் இவர் தீவிரவாத செயலில் ஈடுபட்டார் என்று குற்றம் நிரூபணமாவதாகவும் மேலும் குற்றம் சாற்றப்பட்ட மூவர் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் சர்வதேச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார் . மேலும் அவர் வழங்கிய தீர்ப்பில் ஹெஸ்போலா குழுவின் தலைமை அல்லது அதை ஆதரிக்கும் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும்  தொடர்பு இல்லை என்றும் அதற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் தீர்ப்பில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

car bomb blast

இந்த சம்பவத்தில்  ஆரம்பம் முதலே ஹெஸ்போலா தீவிரவாத குழுவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.மேலும் சலீம் அய்யாஷ்(56), ஹுஸ்ஸேன் ஹஸ்ஸன் ஒனீஸ்ஸி(46), அஸ்ஸாத் ஹஸ்ஸன் சாப்ரா(43), ஹஸ்ஸன் ஹபீப் மெர்ஹி(54) ஆகியோர் ஹெஸ்போலா குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.இவர்கள் மீது குற்றமும் சாற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெஸ்போலா இயக்க ஆயுதப்பிரிவு தளபதி முஸ்தஃபா பத்ருதீன் என்பவர் மீதும் குற்றம் சாற்றப்பட்டிருந்தது இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இவரது பெயர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது. குற்றம் சாற்றப்பட்டவர்கள் யாரும் வழக்கில் ஆஜராகாத நிலையில் இன்று சர்வேதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆயுதப்பிரிவு தளபதி முஸ்தஃபா பத்ருதீனுடன் சேர்ந்து லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரியை படுகொலை செய்ய ஒருங்கிணைத்து செயல்பட்டதாக  அய்யாஷ் மீது  குற்றம்சாற்றப்பட்டது.மேலும் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அய்யாஷ் வெடிபொருட்களை பயன்படுத்தி தீவிரவாத செயல் புரிந்தது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. என்பதை சுட்டிக்காட்டி சர்வேதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Former Lebanese Prime Minister Rafiq Hariri and 21 others were killed in a car suicide bombing in Beirut on February 14, 2005.