உலகையே முடக்கி போட்டு இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. சமூக இடைவெளி மிகவும் முக்கியமானது என்பது தற்போது புரிந்துள்ளது. இருப்பினும் அதிக இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாக்கு பல நாடுகள் மருந்து கண்டுபுடிக்கும் வேளையில் உள்ளது. ஆதில் சில நாடுகள் மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது.
ஆதில் கலிபோர்னியாவில் உள்ள சுறாமீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட் 19 மருந்துக்காக சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
சுறாக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க அதன் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் ஸ்குவேலின் என்ற எண்ணெய்ப் பசையை கரும்பின் மேற் பகுதியில் இருந்து செயற்கை முறையில் தயாரிப்பதற்காகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
It is estimated that about 5 lakh sharks may have been killed to make medicine for the corona.