தொழிலாளர்கள் 60 பேர் ஒரு பேருந்தில் பவுத்த கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். பாங்காக் நகருக்கு 63 கிலோமீட்டர் கிழக்கே இருப்புப் பாதையைப் பேருந்து கடந்தபோது, அதன்மீது ரயில் வேகமாக மோதியது. இதில் பேருந்து தண்டவாளத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுக் கவிழ்ந்தது.இந்த விபத்தில் ரயில் தடம்புரளாமல் சென்றுவிட்டது. பேருந்தில் இருந்த பயணிகளில் 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
ரயில் வரும்போது சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் கேட் இல்லாததே விபத்துக்குக் காரணம் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
At least 20 people have been killed after a train collided head-on with a train in Thailand. 30 people were injured.