ரஷியாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அனஸ்தேசியா. சில மாதங்களுக்கு முன் வயிறு பெரிதாகிக்கொண்டே இருப்பதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியின் தாயாரிடம் கேட்டபோது, அவருக்கு எடை கூடியிருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி, தன் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால் இதை அவர்களிடம் கூற மிகவும் பயந்திருக்கிறாள்,யாருக்கும் தெரியாமல் ஆளில்லாத இடத்திற்குச் சென்ற அந்த சிறுமி, குழந்தையை தாமாகவே பெற்றெடுத்திருக்கிறார். தன் அப்பா,தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த அவர், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தங்களுக்கு சொந்தமான கேரேஜில் உள்ள ஒரு ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடி உள்ளார்.
குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, அந்த சிறுமிக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை கவனித்த தாயார், அவருக்கு குடல் அழற்சி ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் துணை மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார். மேலும் அந்தக் குழந்தையை ஃப்ரீசரில் வைத்திருப்பதையும் கூறியிருக்கிறார். ஆனால் அதிக நேரம் ஆனதால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் 16 வயது சிறுவன் என்றும், கொரோனா ஊரடங்கு விடுமுறையின்போது இருவரும் காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
Anastasia, a 14-year-old girl from the village of Verk-Tula in Siberia, Russia. Neighbors who saw that the stomach was getting bigger?