சீனாவின் ஊகான் மாகாணத்திலிருந்து பரவிய இந்த நோய், உலகம் முழுவதும் ஐந்தரை கோடி பேரை தாக்கியுள்ளது. 13 லட்சம் உயிர்களை காவுவாங்கியுள்ளது. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோய் தாக்கியிருப்பது முதன்முதலாக கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி உறுதிசெய்யப்பட்டதாக "சவுத் சீனா மார்னிங் போஸ்ட்" என்ற நாளிதழ் தெரிவிக்கிறது. ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான நபருக்கு இந்த நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இவர் தான் நோய் தாக்கிய முதல் நபரா என்பது உறுதிசெய்யப்படவில்லை என்றும் நாளிதழ் குறிப்பிடுகிறது. நவம்பர் 17-ம் தேதிக்குப் பிறகு, நாள்தோறும் ஒன்று முதல் 5 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது, ஊகானில் உள்ள சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர் ஊகான் சந்தை காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. புதிதாக வைரஸ் பரவியிருப்பதை டிசம்பர் மாத இறுதியிலேயே மருத்துவர்கள் உணர்ந்ததாகவும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பின் ஆவணங்களில், முதல்முறையாக டிசம்பர் 8-ம் தேதி கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் சந்தைக்கு மருந்து வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் 10 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சீனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தநாட்டின் சினொவாக் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை தயாரித்து அதனை சோதனை செய்து வருகிறது.
இந்தநிலையில் சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இதழான லான்சாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் விஞ்ஞானி சூபெங்காய் கூறும்போது, ‘சினொவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை 2 டோஸ் கொடுத்த பிறகு நோயாளிகளுக்கு 4 வாரத்துக்குள் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
It was first confirmed on November 17 last year, according to the South China Morning Post. A 55-year-old man from Hubei province was diagnosed with the disease.