சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வெக்கத்தில்  சம்மதம் சொன்ன ஆஸ்திரேலிய பெண்! காதலை தெரிவித்த இந்திய ரசிகர்.

australian-woman-who-consented-in-a-hurry-indian-fan-who-expressed-love
  India Border அருண் குமார்   | Last Modified : 29 Nov, 2020 05:52 pm உலகம் உலகம்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை வார்னர் - பிஞ்ச் ஜோடி சேர்த்திருந்த நிலையில், பிஞ்சும் 60 ரன்களில் வெளியேறினார்.  தொடர்ந்து வார்னர் 83 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார்.  இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 64 பந்துகளில் 104-ரன்கள் குவித்த ஸ்மித்  ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய லபுஸ்சேன் 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில்   ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், மேக்ஸ்வெல் மறுமுனையில் இந்திய அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்  அரைசதம் அடித்தார். 

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 389- ரன்கள் குவித்தது.  இதன் மூலம் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்களுடனும் ஹென்ட்ரிக்ஸ்  2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து கொண்டுயிருந்த நிலையில் போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை தெரிவிக்க, அந்த பெண்ணும் அதற்கு வெக்கத்துடன்  சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.

போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

At the spectator arena at the cricket ground between India and Australia, an Indian fan presented a ring to an Australian fan and expressed his love for cinema style.