சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவின் மிகப்பெரிய அருவி என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

நயாகரா நீர்வீழ்ச்சி என்று சொல்வதை விட அருவி என்ற நல்ல பொருத்தமான தமிழ் பெயரை உபயோகிப்பதன் மூலம் அழகுக்கே அழகு சேர்ப்பதாக இருக்கிறது .

நயாகரா அருவி இது ஒரு வற்றாத அருவி என்று சொல்லலாம் .இதன் சிறப்பு என்னவென்றால் எப்பொழுதும் நீர் நிரம்பி வழியும் .சில அருவிகள் சில சமயங்களில் நீர் வற்றலாம் அல்லது அருவியின் அடர்த்தி குறையலாம் .ஆனால் இந்த நயாகரா அருவியானது என்றைக்கும் நீர் வற்றியது இல்லை .இதை பார்ப்பதற்கு மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு நகரங்களில் இருந்தும் சென்று பார்க்கின்றனர் .இப்படி ஒரு அழகான அருவியை மக்கள் இரண்டு நாடுகளில்  இருந்து பார்க்க விரும்புகின்றனர் .இந்த அருவியானது எந்த நாட்டில்  இருந்து பார்த்தாலும் அழகு தான்.அப்படிப்பட்ட அருவியை  அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து பார்க்க விரும்புகின்றனர் மக்கள் .அதாவது கனடாவிற்கு அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த நயாகரா நதி உள்ளது   .இதன் அழகை வானூர்தியில் சென்றும் ,இவ்வாறு பல்வேறு கோணங்களில் ரசிக்க விரும்புகின்றனர் சுற்றுலா பயணிகள்.

இந்த அருவியை காண சுற்றுலா பயணிகள்  கப்பலில் அழைத்து செல்லப்படுவார்கள் .அப்படி அழைத்து செல்லும் பொது அவர்களது உடல் நனையாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் உறையும் அணிந்து கொள்ள தரப்படுகிறது .இந்த கொட்டும் அருவியை காணும் பொழுது எதை பற்றியும் யோசிக்காமல் கண்கள் இமைக்காமல் பார்க்கும் அளவுக்கு கண் கொள்ளா கட்சியாக இருக்கும் .

ஒரே அருவியை மக்கள் இரண்டு முறை பார்க்க விரும்புகின்றனர் அதாவது பகலில் பார்ப்பதோடு அல்லாமல் இரவிலும் பார்க்க விரும்புகின்றனர் .இரவில் பார்க்கும் பொழுது என்ன தெரியும் என்று தானே யோசிக்கிறீங்க .இரவில் அருவியில் பல வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு  அதுனுடைய ஒளியில் அருவி வண்ண நிறங்களாக பிரகாசம் அடைகிறது .இது பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்திக்கிறது .அந்த இரவில் மிக கடும்  குளிரில் சுற்றுலா பயணிகள்  இதை பார்க்க விரும்புகின்றனர் .

அருவி உருவான விதம் :

நயாகரா அருவி  என்பது நியூயார்க் மாகாணத்தில்  உள்ள நயாகரா ஆற்றின் ஒரு நகரம். இது கனடிய எல்லையைத் தாண்டி பரந்து விரிந்துள்ளது .மூன்று அருவிகள் சேர்ந்த ஒரு அருவி தான் நயாகரா .இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திற்கும் இடையில் அமைந்துள்ளது .இந்த மூன்றில் மிகப் பெரியது ஹார்ஸ்ஷூ அருவி , இது கனடிய அருவி  என்றும் அழைக்கப்படுகிறது. 

இது இரு நாடுகளின் சர்வதேச எல்லையைத் தாண்டி உள்ளது. ஸ்மால் அமெரிக்க அருவி  மற்றும் பிரைடல் வெய்ல் அருவி  இந்த இரண்டும் அமெரிக்காவிற்குள் உள்ளன. பிரைடல் வெய்ல் அருவி, ஹார்ஸ்ஷூ அருவியிலிருந்து கோட் தீவு மற்றும் அமெரிக்க அருவியிலிருந்து லூனா தீவு ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது, இரு தீவுகளும் நியூயார்க்கில் மாகாணத்தில் அமைந்துள்ளன.

12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பனி யுகத்தின் முடிவில் நயாகரா அருவி  உருவானது என்று வரலாறு உள்ளது . உருகும் பனியில் இருந்து பெரிய நீரோட்டங்கள் நயாகரா ஆற்றில் வடிகட்டியபோது , நீர் சரிந்து ,இறுதியில் நீரின் சக்தியானது , பாறை அடுக்குகளை சென்று , மேல்நோக்கி நகர்ந்து, அதன் தற்போதைய இடத்தை அடைந்து உள்ளது  .
நயாகரா  அருவி அழகுக்காக மட்டுமல்லாமல் ,மின்சக்தி உற்பத்திக்கும்  பெருமளவு உபயோகப்படுத்த படுகிறது .

 
நயாகரா அழகை  கண்ட முதல் மக்கள் அப்பகுதியில் வாழ்ந்த  பூர்வீக அமெரிக்கர்கள். அதன்பிறகு, நயாகரா அருவியை 1678 டிசம்பரில் பிரெஞ்சு ஆய்வாளர் ஃபாதர் லூயிஸ் ஹென்னெபின் கண்டுபிடித்தார். நயாகரா ஆற்றின் முகப்பில் கோட்டைகள் கட்டப்பட்டதால், இப்பகுதி விரைவில் ஒரு பிரெஞ்சு கோட்டையாக மாறியது.இந்த கோட்டை 1926 மற்றும் 1934 க்கு இடையில் மீட்டெடுக்கப்பட்டது. 

 

The specialty of the falls is always overflowing the water.Niagara Falls is a town on the Niagara River in New York State. It is spread over the Canadian border .The Niagara is a waterfall of three waterfalls.