சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டைரக்டர் ஷங்கர் இப்படியொரு இடத்தில் படம் எடுத்தாரா ?

கிராண்ட் கேணியன் இந்த இடத்தை பற்றி   சொல்ல வேண்டுமானால்  இதன் பேரிலேயே உள்ளது .இது ஒரு பிரம்மாண்டமான  பள்ளத்தாக்கு என்று சொல்லப்படுகிறது .இயற்கை அதிசயங்களில் ஒன்றான இந்த பள்ளத்தாக்கு, அமெரிக்காவின் அரிசோனா, என்ற மாநிலத்தில்  அமைந்துள்ளது .இதன் மொத்த பரப்பளவு சுமார் 3500  கிலோமீட்டர் மேல் விரிந்து உள்ளது .

 

அமெரிக்காவை பொறுத்தவரை மக்களுக்கு எங்கு சுற்றுலா செல்வது என்ற கவலையே இல்லை .போகும் வழியெங்கும் கண்களுக்கு விருந்து தான்.காரில் செல்லும் பொழுது பார்க்கும் வழியெங்கும் மலைகளும் ,பள்ளத்தாக்கும் நிறைந்த பகுதிகளாக காட்சி அளிக்கும் .இது பார்ப்பதற்கு சாதாரண பள்ளத்தாக்கு போன்று காட்சி அளிப்பதில்லை , மிகவும்  பிரமாண்டமாகவும் ,மழையின் உச்சியிலிருந்து அந்த பள்ளத்தாக்கு இருக்கும் . இது பார்ப்பதற்கு உச்சியில் உள்ள மண்பகுதியானது அரிக்கப்பட்டு பாறை அடுக்குகளாக செதுக்கப்பட்டிருக்கும் .

இதில் புதுமை என்னவென்றால் ஒரு பள்ளத்தாக்கை போல் மற்றொன்று இருக்காது .ஒவ்வொன்றும் அதற்கான தனி சிறப்பை கொண்டிருக்கும் .சில பாறைகள் சிவப்பு நிறத்தில் ஆன பள்ளத்தாக்காக இருக்கும்  .சில பாறைகள் அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் .இப்படி ஒரு ஒரு பள்ளத்தாக்கும் அதன் பெயருக்கேற்ப சிறப்பை கொண்டிருக்கும் .

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு , ஆறுகளால் அரிக்கப்பட்டு , மண் சரிவு ஏற்பட்டு மலைகளாக உருவானது தான் இந்த பள்ளத்தாக்குகள் .இது பார்ப்பதற்கு சாதாரண பள்ளத்தாக்கை போல் அல்லாமல் பிரமாண்டமாகவும் ,புது விதமாகவும் இருந்ததால் அதுவே பிற்காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது .இந்த இடத்தில் தமிழ்(ஜீன்ஸ்-எனக்கே எனக்கா ),தெலுங்கு( குவ்வா கோரின்கதோ)  பாடல்களும் எடுக்கப்பட்டுள்ளது .

அமெரிக்காவில் சுற்றுலா இடமென்றால் அவ்வளவு சுத்தமாகவும் ,நிறைய கட்டுப்பாட்டு விதிகளுடன் இருக்கும் .அதனால் தான் சுற்றுலா இடத்தை மிக அழகாக பராமரிக்கின்றனர் .அது இயற்கையாக உருவானதாக இருந்தாலும் சரி ,செயற்கையாக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அந்த இடம் அவ்வளவு தூய்மை ஆக இருக்கும் .
 

லாஸ்வேகாஸ்

இந்த பள்ளத்தாக்கானது, லாஸ்வேகாஸ் லிருந்து 200 கிலோமீட்டர்  தொலைவிலுள்ள மேற்க்குபகுதியின்  பிரம்மாண்டமான  பள்ளத்தாக்கு  .இதன் அருகாமையில் பாலைவனத்திற்கு நடுவில் கட்டப்பட்டுள்ள ஹூவர் அணை ஒன்று உள்ளது .இது கட்டப்படும்பொழுது அதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டட தொழிலார்கள்  அருகாமையில் தங்க வைத்தபொழுது அவர்கள் அங்கு  சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தங்கியிருந்த  அந்த பகுதி தான் இன்றைய காலத்தில் உள்ள  லாஸ்வேகாஸ் என்று சொல்லப்படுகிறது .இந்த லாஸ்வேகாஸ் உலக புகழ்பெற்ற பெரிய ,பெரிய சூதாட்ட கூடம் இருக்கும் இடமாக விளங்குகிறது .

அரிசோனா பகுதியின் மேற்பரப்பில் கோளொரோட ஆறானது ,மலைகளிலும் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் ஓடி  நீர்ப்பரப்பு அரிக்கப்பட்டு பள்ளத்தாக்காக உருவாகியுள்ளது .இங்கு நிறைய மலைப்பகுதிகளுடன் கூடிய பள்ளத்தாக்குகள் உள்ளன .முன்னொரு காலத்தில் இங்கு உள்ள பனிப்பாறைகள் உருகி ,அதில் இருந்து உருவான ஆறு மலைப்பகுதிகளில் சென்று மற்றும் பாலைவனப்பகுதி அரிக்கப்பட்டு உருவானது தான் இந்த பிரம்மாண்டமான  பள்ளத்தாக்கு .

ஸ்கை வாக் :

உண்மையில் ஸ்கை-வாக் என்பது ஆகாயத்தில் நடப்பது ஆகும் .ஆனால் இந்த ஸ்கை -வாக் இல் நடக்கும் பொழுது ஆகாயத்தின் உயரத்தில் நடப்பதை போன்ற எண்ணம் மனதில் தோன்றும். மேற்க்குபகுதியில் உள்ள   இந்த பிரம்மாண்டமான  பள்ளத்தாக்கு  (ஸ்கை வாக்) என்று சொல்லப்படுகிற மிக பிரசித்த பெற்ற  பார்வையாளர்களை கவரக்கூடிய  இடமாக உள்ளது .இங்கு செல்வதற்கு பள்ளத்தாக்கின் கீழ் இருந்து பள்ளத்தாக்கின் மேற்பகுதிக்கு அழைத்து செல்வதற்காக அங்கு பிரத்தியேக பேருந்து வசதிகளையும் அமைத்துள்ளனர் .அதன் மூலம் சுற்றுலா பயணிகலை பள்ளத்தாக்கின் மேற்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர் .

அங்கு இருந்து சுற்றுலா பயணிகளை வரிசையாக க்ளாஸ் வாக் இல் செல்வதற்கு சில விதிமுறைகளுடன் அனுமதிக்கின்றனர்  .இது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால்,இது தரையில் இருந்து  5000  அடி உயரத்தில்  மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி வெளிப்பகுதியில் நீட்டப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. கண்ணாடி மீது நடந்து கொண்டு கீழ் பகுதியில் 5000 அடி உயரத்தில் உள்ள பள்ளத்தாக்கை இந்த கண்ணாடி மீது நின்று கொண்டே பார்க்க முடியும் .

அந்த கிளாஸ் வாக் இல் செல்வதற்கு முன்னர் நாம் நம்மிடம் உள்ள முதுகு பைகள் ,கை பைகள் ,கைபேசி அனைத்தையும் ஒரு லாக்கரில் வைத்துவிட்டு சென்று திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு சாவியையும் தருகிறார்கள் .காரணம் நாம் ஒரு பொருளை கிழே தவற விட்டால் திரும்ப பெற முடியாது .மற்றொரு காரணம் நம் கவனம் எக்காரணத்தை கொண்டும் சிதறக்கூடாது .பலர் கைபேசியுடன் சென்றால் புகைப்படம் எடுத்துக்கொண்டு மற்றவர்கள் கவனத்தையும் சிதறடிக்க செய்கின்றனர் என்பதற்க்காக அங்கு வேலை செய்கின்ற ஊழியர்களே காமெராவுடன் நிற்கின்றனர் புகைப்படம் எடுத்து தருவதற்கு .

அங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை  குறைந்த அளவு எண்ணிக்கையை மட்டுமே க்ளாஸ் வாக் இல் அனுமதிக்கின்றனர் .காரணம் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு இடைவெளி இல்லாமல் இருக்க கூடாது என்பதற்காகவும் அதன் பிரமாண்ட அழகை ரசிப்பதற்கும் வரிசையாக அனுமதிக்கின்றனர் .அந்த க்ளாஸ் வாக் இல் செல்லும் பொழுது காலணிகள் வழுக்கி தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்க்காக காலணிகள் மீது அணிய ஒரு காலுறையை தருகின்றனர் .

இந்த கிளாஸ் வாக் இல் நடந்து கொண்டு கிழே பார்ப்பது ஒரு வித பயம் கொண்ட பிரமாண்ட பள்ளத்தாக்காக இருக்கும் ,நினைத்து பாருங்கள் 5000  அடிக்கு மேல் உள்ள உயரத்தில் இருந்து நடந்து கொண்டு கண்ணாடியின் வழியாக காலிற்கு அடிப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கை காணும் பொழுது ஒரு விதமான பயம் கலந்த எண்ணத்துடன் மிகவும் பிரமாண்டமான  பள்ளத்தாக்கை பார்ப்பது போல்  இருக்கும் . நீங்கள் நடந்து செல்லும் பொழுது ஒரு கண்ணாடிப்பகுதி உடைந்தால் நினைத்து பாருங்கள் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்று அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள் இந்த ஸ்கை-வாக் .இது உலகத்தில் உள்ள வியூ பாய்ண்ட்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயரமான வியூ பாயிண்ட் ஆகும் .  

சுற்றுலா பயணிகள் எந்த அளவு பாதுகாப்பாக சென்று பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுக்கான தேவைகளை செய்து தருகின்றனர் .ஆனால் வெளியே வந்த பிறகு  சிலர் விதிமுறைகளை மீறுவதாலும் ,பள்ளத்தாக்கின் பாதுகாப்பு இல்லாத இடங்களில் நின்று கொண்டு கைபேசியை பயன்படுத்தி  தற்படம்( செல்ப்பி ) எடுப்பதாலும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு ஆபத்து நேரிடுகிறது .எங்கு சென்றாலும்  விதிமுறைகளை கடைபிடித்தால், நாம்  அந்த இடத்தில் உள்ள அற்புதமான விஷயங்களை உணர முடியும் .

 

 

 

It is one of the famous grand canyon in America .This is world largest view point in the world .