சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சந்தேகத்தால் பெங்களூரில் நடந்த கொடுமை .


பெங்களூரில் ஒருவர் பதினெட்டு வருடங்களாக தன் மனைவியை சந்தேக பார்வையுடன் நடத்தியுள்ளார் . 45 வயதாகும் இவர் , மகாதேவபூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருடைய மனைவிக்கு 38வயது .இருவருக்கும்  திருமணம் ஆகி 18 வருடங்கள்  ஆகிறது  .திருமணத்திற்கு முன்பு இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர் .இருவருக்கும் பிடித்திருந்த காரணத்தால் திருமணமும் செய்துள்ளனர் .இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . 
 
பதினெட்டு வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் மனம் ஒன்றதா தம்பதிகளாக இருந்துள்ளனர் . காரணம் சந்தேகம் .மனைவிக்கு தெரியாமல் கைபேசியை பார்ப்பது ,யாரிடம் பேசுகிறார் ,எங்கு போகிறார் .எங்கிருந்து வருகிறார் என்று அனைத்து விஷயங்களையும் கண்காணிப்பது என்று அதே வேலையாக இருந்து வந்துள்ளார் .  


மனைவி தன்னிடம் இருந்து விலகி விடுவாரோ என்ற பயத்தினால் அனைத்தையும் கவனித்து வந்துள்ளார் .இதனால் வேலைக்கு கூட இவரால் போக முடியாமல் வீட்டிலேயே இருந்து மனைவியை கண்காணித்துள்ளார் .மனைவியை கண்காணிக்க அலமாரியில் சென்று ஒழிந்து கொள்வது ,பீரோவினுள் ஒழிந்து கொள்வது என திரைப்படங்களில் வருவது போல நடந்து கொண்டுள்ளார் .

இதனால் மனைவியால் நிம்மதியாக இருக்க முடியாமல் இப்படியொரு கணவரை நினைத்து மனம் நொந்துள்ளார் .இவ்வாறு இவரும் மனநோயாளி ஆகி மனைவியையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் இதுவே பல நேரங்களில் பெரும் சண்டையாக உருவெடுத்துள்ளது .அவர் முழு மனநோயாளியாக மாறி மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார் .18 வருடங்களாக பொறுத்துக்கொண்ட மனைவி இறுதியில் பொறுத்துக்கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

The atrocity that took place in Bangalore on suspicion.