சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

85 வயதில் அசத்தும் பாட்டி பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் பரபரப்பு டிவிட்டர்

மனித நேயம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை .இப்படியொரு கொரோனா தொற்றுநோய் பரவுகின்ற காலகட்டத்தில் பிள்ளைகளே  பெற்றவர்களை பாதுகாக்காத நிலையில் 85 வயதிற்கு மேலான பாட்டி ஒருவர் முகக்கவசம்  அணிந்து கொண்டு ரோட்டில் சிலம்பம் சுற்றுவது பார்ப்போரை கண்கலவைக்கும் படியாக உள்ளது.

இரண்டு கைகளிலும் குச்சியை கொண்டு சிலம்பம்  வேகமாக சுற்றி கொண்டு   தன் கைகளை கூப்பிக்கொண்டு மற்றவர்களிடம் உதவிகளை கேட்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .இந்த வயதிலும் இந்த சிலம்பக்கலையை திறமையாக சுற்றுவதை  கண்டு பலரும் சமூக வலை தளத்தில் பகிரப்பட்டு வருகின்றனர்.
.
இந்த பாட்டியின் பெயர் சாந்த பாலு பவார் .இவருக்கு 85  வயது என்றும் இவர்  புனே பகுதியை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர் .சிறு வயதில் இருந்தே சிலம்ப கலையை கற்றுக்கொண்டவர் என்றும் விருதுகளை வாங்கியவர் என்றும் இவரை பற்றிய பல புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது .
இதனை கண்ட பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்மாக் மற்றும் சோனுசூர்  அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
 .
இந்த பாட்டியின்  விவரம் கூட பகிரப்பட்டு இவருக்கு உதவ விரும்புவர்கள் உதவலாம் என்றும் நிறைய பேர் இந்த நல்ல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். 
 

85 year old grandma doing martial-art in road