சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்த பொழுது டீக்கடைக்காரர்க்கு காத்திருந்த 50 கோடி கடன் நிலுவை செய்தி

ஹரியானாவில் டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள குருக்ஷேத்திரம் டெல்லியில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது மஹாபாரதப் போர் நடைபெற்ற இடமாகும். கௌரவர்களின் முன்னோர்களில் ஒருவரான குரு என்னும் அரசனால் இதற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் உண்டாயிற்று என்று கூறுவர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது இவ்விடத்தில் தான்.இங்குள்ள தானேஸ்வரம் ஹர்ஷ சக்கரவர்த்தியின் தலைநகரமாக விளங்கியது.

சரி விஷயத்துக்கு வருவோம்  குருக்ஷேத்திரத்தில்  ஒரு தேநீர் விற்பனையாளர் பணம் தேவைக்காக  அருகில் உள்ள ஒரு வங்கியை அணுகிய பொழுது அந்த வங்கி நிராகரித்ததுவிட்டது . அது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே ரூ .50 கோடி கடன் பெற்று இருப்பதாகவும் அது நிலுவையில் இருப்பதாகவும் கடன் தர மறுத்துவிட்டது இதை கேட்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .

தேநீர் விற்று தனது குடும்பத்தை நடத்திவரும் அவர் தற்பொழுது வங்கிக்கு ரூ .50 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி கூறிவிட்டது .இதனை மறுத்த அவர் ஒருபோதும் கடனை பெறவில்லை என்றும்  கோவிட் -19 தொற்றுநோயால் எனது நிதி நிலைமை மோசமாக இருப்பதால் நான் கடனுக்காக விண்ணப்பித்தேன். ஆனால் நான் ஏற்கனவே ரூ .50 கோடி கடன் வைத்திருக்கிறேன், என்பது  எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை என்று புலம்பி வருகிறார் .

அவருக்கு அருகில் கடை வைத்திருக்கும் நபர் கூறுகையில், அவர் ஒருபோதும் கடன் வாங்காதபொழுது  வங்கியானது  அவரை எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் கூறுகிறது என்று அவரும் கருத்து தெரிவித்து வருகிறார் .இதனை தொடர்ந்து  . “நான் எந்த கடனையும் எடுக்காதபோது, ​​என் பெயரில் இந்த கடன் யாருக்கு வழங்கப்பட்டது, என்று எனக்கு புரியவில்லை” என்று தேநீர் விற்பனையாளர் புலம்பி வருகிறார் 

50 crore loan outstanding news waiting for tea shop owner while applying for loan in bank