சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கார் ஓட்டுனரால் ஏற்பட்ட விபரீதம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பேர் பரபரப்பு வீடியோ

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுப்பாலத்தை லாவகமாக கடந்துவிட நினைத்த கார் ஓட்டுனரால் ஏற்பட்ட விபரீதம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பேர் பரபரப்பு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


 இந்தியாவில் பருவமழையில் இந்த ஆண்டு எதிர்பார்ததை விட அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அசாம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களான, ஆந்திரா, தெலங்கானா, லட்சத்தீவு, கேரளா போன்ற மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இப்பகுதிகளில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது 

இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள கிராமத்தில்  கனமழை காரணமாக ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .  இதனால் ஆற்றின் குறுக்கே இருந்த  தரைப்பாலம் ஒன்று  நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வாகனப்போக்குவரத்து தடைப்பட்டது. இருப்பினும் சில வாகனங்கள் கரைபுரண்டோடும் ஆற்று நீரையும் பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்து சென்றவண்ணம் இருந்துள்ளது. . அவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வாகனம்  சென்ற ஒரு கார் ஒன்று ஆற்றை கடந்து செல்லும் பொழுது  நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கார் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்ட உள்ளூர்  கிராம மக்கள் காரில் இருந்த 2 நபர்களை சாமர்த்தியமாக  மீட்டுள்ளனர். அனால்  காரை நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ  காட்சி வலையத்தளங்களில்   வெளியாகி காண்போரை பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் கார் ஆற்று வெள்ளத்தை கடக்கும் காட்சிகளும் பின்னர் நீரில் சிக்கி கார் இழுத்துச் செல்லப்படும் காட்சிகளும் வலையத்தளங்களில்   தீயாய் பரவி வருகிறது 

2 people who survived the accident caused by a car driver who thought to cross the flooded river bridge gracefully, sensational video